மோடியின் 3வது ஆட்சியில் இந்தியப் பங்குச்சந்தை நினைத்தது போல் தடாலடியாக உயராமல், மந்தமான வர்த்தகத்தையே பதிவு செய்து வருகின்றது. இந்த நிலையில் புதன்கிழமை காலை வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு புதிய உச்சத்தைத் தொட்டன.
இன்றைய வர்த்தகத்தில் FMCG துறை தவிர அனைத்து துறை குறியீடுகளும் லாபத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி 50 குறியீடு தனது முந்தைய உச்சமான 23,411.9 புள்ளிகளைக் கடந்து 23,441.95 என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டது.

இதேபோல், மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் குறியீடு சுமார் 500 புள்ளிகள் அதாவது, 0.60% உயர்ந்து 76,900 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இது புதிய உச்சத்திலிருந்து கிட்டத்தட்ட 100 புள்ளிகள் மட்டுமே குறைவு.
தேர்தல் முடிவுகள் வெளியான காலகட்டத்தில் ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்த துறை என்றால் அது FMCG துறை பங்குகள் தான். ஆனால் தற்போதும் FMCG துறை பங்குகள் சரிவில் உள்ளது. மேலும் புதிய ஆட்சியில் இந்திய வர்த்தக போக்கு எப்படியிருக்கும் என கணிக்க முடியாத நிலையில் முதலீட்டாளர்கள் நிஃப்டி பங்குகளில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர்.
நிஃப்டி 50 குறியீட்டில் HCL டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ, பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிகம் லாபம் ஈட்டிய நிறுவனங்கள்.
டைட்டன், ஏசியன் பெயிண்ட்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகியவை பின்தங்கியுள்ளன. இன்றைய ஆசிய சந்தை வர்த்தகத்தில் தென் கொரியாவின் சியோல் மட்டுமே லாபத்தில் இருந்தது, டோக்கியோ, ஷங்காய் மற்றும் ஹாங்காங் சந்தைகள் சரிவில் உள்ளது. அமெரிக்கச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை ஓரளவு உயர்வில் முடிந்தும் ஆசிய சந்தை சரிவில் உள்ளது.
இதேவேளையில் கடந்த 5 நாட்களில் இந்திய வி.ஐ.எக்ஸ் (VIX) குறியீடு 32 சதவீதம் குறைந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றத்தைக் குறைத்துள்ளது.
அமெரிக்க பணவீக்க விகிதங்கள் மற்றும் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள் உலகளாவிய பங்குச்சந்தையின் போக்கை பாதிக்கும்.
இதேவேளையில் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.42 சதவீதம் உயர்ந்து ஒரு பேரலுக்கு 82.26 டாலராக உள்ளது.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ரூ.111.04 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர், என்று பரிவர்த்தனை தரவு தெரிவிக்கிறது.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications