கடந்த ஒரு மாதத்தில் நிஃப்டி ஆட்டோ இன்டெக்ஸ் 17% சரிவினைக் கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் நிஃப்டி குறியீடும் கூட 6% தான் சரிவினைக் கண்டுள்ளது.
இது சந்தையில் தொடர்ந்து பல கமாடிட்டிகளின் விலை உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், பல உதிரி பாகங்களுக்கும் பற்றாக்குறை நிலவி வருகின்றது.
தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்து வந்த நிலையில், சப்ளை சங்கிலியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வாங்கலாம்
இதனால் தொடர்ந்து பல்வேறு டாப் ஆட்டோ பங்கு விலையானது சரிவில் காணப்படுகிறது. இந்த பங்குகள் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஆட்டோ பங்குகள் பலவும் நிறுவனத்தின் மோசமான வளர்ச்சியினால் சரிவினைக் காணவில்லை. தொடர்ந்து மூலதன பொருட்கள் பற்றாக்குறை, விலையேற்றம், கொரோனா, ஓமிக்ரான் உள்ளிட்ட பல காரணிகளுக்கும் மத்தியில் சரிவினைக் கண்டுள்ளன.
அசோக் லேலண்ட்
கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டு இருந்த நிலையில், உக்ரைன் - ரஷ்யா பதற்றமானது மேற்கொண்டு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கேபி மார்கன் அறிக்கையில், அசோக் லேலண்டின் இலக்கு விலையானது 135 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இது தற்போது வணிக வாகன விற்பனையில் இழந்த சந்தையினை மீட்டுக் கொண்டுள்ளது. இது இந்த பங்கு விலைக்கு சாதகமாக அமையலாம். இதன் தற்போதைய பங்கு விலை நிலவரம் சற்று குறைந்து, 106.55 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது.
மாருதி சுசுகி
மாருதி சுசுகியின் மதிப்பீட்டினை அன்டர்வெயிட் (underweight) என்ற நிலையில் இருந்து (Neutral) என்ற நிலைக்கு, ஜேபி மார்கன் மதிப்பீட்டினை மாற்றியமைத்துள்ளது. இதன் விலை சமீபத்தில் 6525 ரூபாய் என்ற லெவலுக்கு மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது தற்போது 2.61% அதிகரித்து, 7187 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
மகேந்திரா & மகேந்திரா
மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் இலக்கு விலையானது 965 ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது சற்று அதிகரித்து, 736 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பஜாஜ் ஆட்டோ
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்கு இலக்கு விலையாக 3800 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலவரம் 2.26% அதிகரித்து, 3412 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
ஹீரோ மோட்டோ கார்ப்
இதே ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் பங்கு இலக்கு விலையானது 2640 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலவரம் 1.31% அதிகரித்து, 2320.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
டிவிஎஸ் மோட்டார்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பங்கு இலக்கானது 620 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை தற்போது 1.25% அதிகரித்து, 562.50 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தினை ஓவர்வெயிட் (Overweight) ஆக தொடர்வதாகவும், இதன் இலக்க்கு விலை 515 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இதன் தற்போதைய பங்கு விலை நிலவரம் 3.26% அதிகரித்து, 419.15 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications