பொதுவாகப் பட்ஜெட் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னும், பின்னும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பதற்றமான சூழ்நிலையிலேயே இருப்பது வழக்கமான விஷயம். ஆனால் இந்த முறை இடைக்காலப் பட்ஜெட் என்பதால், பட்ஜெட் நாளில் சென்செக்ஸ் உயர்வுடன் இருந்தது மூலம் முதலீட்டாளர்கள் பதற்றம் இல்லாமல் இருந்தது கவனிக்க முடிந்தது.
பட்ஜெட் அறிவிப்புகள் தனிநபருக்குப் பெரிய அளவிலான நன்மை அளிக்கும் வகையில் இல்லாமல் இருந்தாலும் நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக மூலதன செலவினத்தை 11 சதவீதம் உயர்த்தி 11 லட்சம் கோடி ரூபாயாக அறிவித்தது, நடப்பு கணக்குப் பற்றாக்குறை அளவீட்டைக் குறைத்தது எனப் பல விஷயங்கள் சந்தைக்குச் சாதகமாக அமைந்தது.

இதன் எதிரொலியாக இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1200 புள்ளிகள் உயர்ந்ததோடு, நிஃப்டி 22,126.80 புள்ளிகளைத் தொட்டு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்றைய உயர்வுக்கு முக்கியமான காரணமாக இருந்தது வங்கி மற்றும் ஐடி பங்குகள் தான்.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1198.15 புள்ளிகள் உயர்ந்து 72,843.45 புள்ளிகளைத் தொட்டு உள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 369.25 புள்ளிகள் உயர்ந்து 22,066.70 புள்ளிகளை எட்டியுள்ளது. அதிகப்படியாக 73,089.40 புள்ளிகளைத் தொட்டது.
ஆனால் அடுத்தச் சில மணிநேரத்தில் சென்செக்ஸ் வெறும் 600 புள்ளிகள் உயர்வுடன் 72,306.24 புள்ளிகளைத் தொட்டு உள்ளது. டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐடிசி, டைட்டன், மாருதி, ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் சரிந்துள்ளது. ஐடி பங்குகள் அனைத்தும் 2 சதவீத உயர்வில் உள்ளது.
இன்றைய பங்குச்சந்தைக்கு 3 முக்கியக் காரணம்..
சர்வதேச சந்தை: அமெரிக்கப் பங்குச்சந்தை வியாழக்கிழமை சிறப்பான உயர்வைப் பதிவு செய்துள்ளது. இதன் தாக்கம் ஒட்டுமொத்த ஆசிய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
ரிலையன்ஸ் பங்குகள்: இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2.5 சதவீதம் வரையில் உயர்ந்து 2,930.60 ரூபாய் என்ற 52 வார உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது. இது முதலீட்டாளர்களுக்குப் பட்ஜெட் முடிந்த கையோடு பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
பங்குச்சந்தை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி பற்றாக்குறை அளவீட்டை 2026க்குள் 4.5 சதவீதமாகக் குறைக்கும் பாதையில் பயணிப்பதை இந்தப் பட்ஜெட் மூலம் உறுதி செய்துள்ளார். இதேபோல் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் மூலதன செலவினத்திற்காக 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications