இந்திய பங்குச்சந்தையில் சமீபத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் ரூ.9 லட்சம் கோடி மதிப்பிலான சந்தை மூலதனம் மாயமாகியுள்ளதாக பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் சுமார் 1700 புள்ளிகள் சரிந்த நிலையில், Nifty 50 23,000க்கு கீழ் முடிவடைந்தது. இதேவேளை, இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக ரூ.94.84 வரை பலவீனமடைந்துள்ளது.
இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FII) தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்துவருவது தான். அவர்கள் சந்தையிலிருந்து பணத்தை வெளியே எடுத்துக்கொண்டிருப்பதால், ரூபாய் மீது கூடுதல் அழுத்தம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. வங்கிகள் வைத்திருந்த டாலர் 'ஃபார்வர்ட்' பொசிஷன்களை குறைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. அதாவது பியூச்சர்ஸ் சந்தையில் டாலரை அதிகமாக வாங்கியிருந்த நிலையை குறைக்க வேண்டும் என ஆர்பிஐ வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் குறுகிய காலத்தில் ரூபாய் மதிப்பு தற்காலிகமாக உயர வாய்ப்பு உள்ளது.
ஆனால் இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நிலையானதாக இருக்காது என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கிறார். திங்கட்கிழமை வர்த்தகத்தில் திடீரென 50 பைசா வரை உயர்வு ஏற்பட்டாலும், அது Reserve Bank of India எடுத்துள்ள நடவடிக்கையின் விளைவு மட்டுமே. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்பனை செய்தால், ரூபாய் மீண்டும் பலவீனமடையும் அபாயம் நீடிக்கிறது.
அமெரிக்க பங்கு சந்தைகளான Nasdaq மற்றும் S&P 500 ஆகியவை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் கடுமையாக சரிந்துள்ளன. இவை அதிக மதிப்பீட்டில் (Overvaluation) இருந்ததால் முதலீட்டாளர்களை கைகழுவ முடிவு செய்த காரணத்தால் சரிவு ஏற்பட்டது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் திங்கட்கிழமை எதிரொலிக்கும்.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் அமெரிக்க பங்குச்சந்தையின் நிலை
Nasdaq -2.15%
Nasdaq 100 -1.93%
S&P 100 -1.85%
Small Cap 2000 -1.75%
Dow Jones -1.73%
S&P 500 -1.67%
NYSE Composite -0.97%
S&P 500 VIX +13.16%
இந்த பின்னணியில், நிப்டி திங்கட்கிழமை மட்டும் 2% வரை சரிவை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக ஆனந்த் ஸ்ரீனிவாசன் கணித்துள்ளார். தற்போதைய நிலைமையில் 22,850 அருகில் இருக்கும் நிப்டி, 22,400 வரை சரிவதற்கும், அதற்கும் கீழ் 22,000 அல்லது 21,000 நிலைகளையும் தொட்டுவிடும் அபாயம் குறுகிய காலத்தில் உள்ளது.
மதிப்பீடு குறைந்தாலும் அபாயம் நீடிக்கும்
நிப்டி அதன் உச்ச நிலையிலிருந்து சுமார் 12% சரிவடைந்துள்ளது. இதனால் சில முதலீட்டாளர்கள் இது வாங்கும் வாய்ப்பு என கருதினாலும், ஆனந்த் ஸ்ரீனிவாசன் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறுகிறார்.
தற்போதைய P/E விகிதம் குறைந்திருந்தாலும், அது முழுமையான மதிப்பீட்டை காட்டாது என்று விளக்கப்படுகிறது. நிஃப்டி P/E விகிதம் கணகிடும் போது பொதுத்துறை நிறுவனங்களை நீக்கிவிட்டு கணக்கிட்டால் மட்டுமே உண்மையான P/E விகிதம் தெரியும். அதுவரையில் முதலீட்டாளர்களுக்கு மாயையான ஒரு சூழல் தான் இருக்கும்.
இன்னும் பெரிய சவால்கள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆனந்த் ஸ்ரீனிவாசன். குறிப்பாக இந்தியாவின் Current Account Deficit (CAD) 3.5% வரை அதிகரிக்கலாம். இதனால் மேலும் பானிக் விற்பனை (panic selling) உருவாகும் வாய்ப்பு உள்ளது.
மேலும், ஈரான் போர் தொடர்ந்தாலோ, தாக்குதல்கள் அதிகமானாலோ, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வேலை செய்துவரும் இந்தியர்கள் திரும்பி வர வேண்டிய நிலை உருவானால், இதனால் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை (remittances) குறையும் அபாயமும் உள்ளது. இது பொருளாதாரத்திற்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இதனால் தற்போதைய சந்தை நிலை "மதில் மேல் பூனை" போல இருக்கிறது என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது வீடியோவில் கூறுகிறார். அதாவது, எந்த திசையில் நகரும் என்பது உறுதியில்லாத சூழல் நிலவுகிறது. சந்தை ஏற்கனவே சரிந்திருந்தாலும், இன்னும் கீழே செல்லும் வாய்ப்பு இருப்பதால் முதலீட்டாளர்கள் அவசர முடிவுகளை தவிர்த்து, கவனமாக செயல்படுவது முக்கியம் எனவும் எச்சரித்துள்ளார்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

நாளை பங்குச் சந்தை ஏற்றம் காணுமா? சரியுமா? சந்தையை தீர்மானிக்கப் போகும் 3 முக்கிய காரணிகள்?

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!



Click it and Unblock the Notifications