தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 ஆம் தேதி சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு கிட்டத்தட்ட 6 சதவீதம் சரிந்த பின்னர், இன்று (ஜூன் 5) முதலீட்டாளர்கள் வேல்யூ பையிங் முறையில் பாதுகாப்பான மற்றும் துறையில் முன்னணி நிறுவனங்களை டார்கெட் செய்து முதலீடு செய்த காரணத்தால் இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் 3.2 சதவீதம் உயர்ந்துள்ளன.
நிஃப்டியில் வங்கி, வாகனத் துறை மற்றும் நுகர்பொருள் துறை பங்குகள் முன்னேற்றம் கண்டது மூலம் நேற்றைய சரிவில் பெரும் பகுதி மீண்டு உள்ளது. 4 வருடத்தில் மோசமான வர்த்தக நாளில் இருந்து அடுத்த நாளே கிட்டதட்ட 50 சதவீதம் மீண்டு வந்துள்ளது மிகவும் முக்கியமான விஷயம்.

இன்றைய வர்த்தக சந்தை முடிவில், சென்செக்ஸ் குறியீடு 2,303 புள்ளிகள் அதாவது 3.2 சதவீதம் உயர்ந்து 74,382 ஆகவும், நிஃப்டி 50 குறியீடு 689 புள்ளிகள் அதிகரித்து 22,573 ஆகவும் முடிந்தது. இதேபோல் இன்றைய வர்த்தகத்தில் சுமார் 2,321 பங்குகள் உயர்ந்துள்ளது, 1,031 பங்குகள் சரிந்தும் மற்றும் 76 பங்குகள் மாற்றமின்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
2024 பொதுத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கட்சி சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் கிட்டத்தட்ட 6 சதவீதம் சரிந்த பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மறக்க மாட்டார்கள்.
குறிப்பாக கொரோனா தொற்றுக்குப் பின்பு பங்குச்சந்தைக்குள் நுழைந்த இளம் தலைமுறை முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். இந்த இழப்பில் இருந்து மீண்டு வர குறைந்தது 2 மாதங்கள் ஆகும் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இழப்பைச் சரிசெய்ய முக்கிய பங்குகளில் அதிகப்படியான முதலீடுகள் செய்யும் காரணத்தால் இந்த சென்செக்ஸ், நிஃப்டி மீண்டு வருகிறது.
"நேற்றைய வர்த்தகம் சந்தைக்குச் சற்று ஆச்சரியமாக அமைந்தது. இருப்பினும், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியானதால், சந்தையில் உயர்வு காணப்படுகிறது" என்று ஷேர் கான் நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவர் சஞ்சீவ் ஹோட்டா தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்திற்கு வர்த்தகர்கள் தங்கள் பங்கு முதலீடுகளை நுகர்பொருள், பார்மா மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பாதுகாப்பான துறைகளை நோக்கி மாற்றியமைக்க வேண்டும் என்று ஹோட்டா அறிவுறுத்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்றம் கண்ட மூலதன பொருட்கள், பாதுகாப்பு, கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) போன்ற பங்குகள் மேலும் சரிவுக்கு வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.
தேர்தல் முடிவுகளுடன் தொடர்பு இல்லாததால், FMCG போன்ற பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துகின்றனர் என்று எலாரா கேப்பிடல் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (ஆராய்ச்சி பிரிவு) கரண் தௌரானி தெரிவித்தார்.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications