இது லாபம் பார்க்க சரியான நேரமா.. வரலாற்று உச்சத்தில் சந்தைகள்..!

டெல்லி: கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், இந்திய பங்கு சந்தைகள் கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன.

அவ்வப்போது சற்று சரிவினைக் கண்டு வந்தாலும், இன்று வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளன.

எனினும் இந்த வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி இருப்பதால், இந்த ஏற்றம் இப்படியே இருக்குமா? என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் முதலீட்டாளர்கள் தங்களது ஆர்டர்களை புராபிட் புக் செய்தாலும், ரோல் ஓவர் செய்தாலும் சந்தை சரிவினைக் காணும். ஆக இது லாபம் பார்க்க சரியான நேரம் தான் என்று நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

பட்டையை கிளப்பி வரும் ஜிஎஸ்டி வசூல்

பட்டையை கிளப்பி வரும் ஜிஎஸ்டி வசூல்

அதிலும் நிஃப்டி குறியீடு முதல் முறையாக இன்று 13,000 தொட்டுள்ளது. எஸ் & பி சென்செக்ஸ் 44,500 என்ற லெவலை தொட்டுள்ளது. ஆக நிச்சயம் இது முதலீட்டாளர்களுக்கு புராபிட் புக்கிக் செய்யும் நேரமாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவினை பொறுத்த வரையில் கொரோனா தாக்கம் ஒரு புறம் இருந்தாலும், ஜிஎஸ்டி வசூலானது எதிர்பார்ப்பினை விட அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த மாதமே 1 டிரில்லியனையும் தாண்டி சாதனை படைத்தது.

கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா தடுப்பு மருந்து

மிக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொரோனா தடுப்பு மருந்து பற்றிய, சாதகமான செய்திகள் வெளி வந்து கொண்டுள்ளது. இது சந்தை ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. ஆக இந்த புதிய உச்சம் முதலீட்டாளர்களை நல்ல லாபத்தில் வெளியேற வழிவகுக்கலாம். இதுவும் சந்தை சரிவுக்கு காரணமாக அமையலாம்.

பொருளாதார மீட்சி தொடங்கும்

பொருளாதார மீட்சி தொடங்கும்

நான்கு விதமான கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், பொருளாதாரம் மீள்ச்சி காண தொடங்கும். எனினும் முதல் காலாண்டில் கண்டிருந்த வீழ்ச்சியினை விட சற்று மேம்படும். முதல் காலாண்டில் வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இரண்டாவது காலாண்டில் சற்று குறையலாம். இது - 5 முதல் -10 வரையில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி பாதையில் இருக்கும். இதனால் நிறுவனங்களும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும். இதன் மூலம் EPS விகிதமும் அதிகரிக்கும். அடுத்த நிதியாண்டில் நிஃப்டி 18% ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெஞ்ச் மார்க் குறியீடுகள்

பெஞ்ச் மார்க் குறியீடுகள்

கடந்த மார்ச் 2020ல் இருந்து பெஞ்ச் மார்க் குறியீடுகள் 73.5 சதவீதம் அளவு ஏற்றத்தினை கண்டுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்ய நினைக்கலாம். அதோடு முதலீட்டாளர்கள் தொடர்ந்து சந்தை ஏற்றத்தினை காணலாம். ஆக இது சற்று அதிகரிக்கலாம். இது சந்தை ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம். ஆக சந்தை சரிவினைக் கண்டாலும், அது குறுகிய சரிவாகத் தான் இருக்கும். அது மீண்டும் ஏற்றம் காணவே செய்யும்.

அன்னிய & உள்நாட்டு முதலீடுகள் அதிகரிக்கும்

அன்னிய & உள்நாட்டு முதலீடுகள் அதிகரிக்கும்

சந்தை சாதமான ஏற்றத்தில் உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளை அதிகரிப்பர். இதனால் குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு, சந்தையில் தற்போது மீண்டும் அன்னிய முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர். அதோடு முதலீட்டாளர்கள் ஸ்மால் கேப் பங்குகளில் தங்களது முதலீடுகளை அப்படியே வைத்திருக்கலாம். மற்றபடி அவர்கள் லாபத்தினை புக் செய்து, மீண்டும் புதிய முதலீடுகளை தொடங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+