இந்திய மக்களுக்கும், இந்திய வங்கிகளுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பெரும் வங்கி கடன் மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிப்போன வைர வியாபாரியான நீரவ் மோடி-யிடம் இருந்து வசூலிக்க வேண்டிய 2,348 கோடி ரூபாய்க்கு அதிகமான நிலுவைத் தொகையில் ஒரு பகுதியை மீட்கும் முயற்சி துவங்கப்பட்டு உள்ளது.
மும்பையில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயம்-I நாட்டை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் குழுமத்திற்கு சொந்தமான சோலார் எனர்ஜி ஆலையை ஏலம் விட முடிவு செய்துள்ளது. மூன்றாவது முறையாக, தெற்கு மும்பையின் ஆடம்பர பகுதியான பெடர் சாலையில் உள்ள நீரவ் மோடியின் ஆடம்பரமான பிளாட் ஏலம் விடப்படும் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள கண்டலே கிராமத்தில் அமைந்துள்ள மோடியின் சோலார் எனர்ஜி ஆலை 5.247MW திறன் கொண்டது. ஆலை மற்றும் இயந்திரங்களுடன், சோலார் ஆலையின் மதிப்பு ரூ.12.40 கோடி.
மேலும் நீரவ் மோடியின் பெடர் ரோடு பிளாட் க்ரோஸ்வெனர் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ளது. இதனுடன் மேலும் இரண்டு வாகன நிறுத்துமிடங்களுடன் முழு வசதியுடன் கூடிய வீடாக இருக்கும் இந்த சொத்துக்களும் ஏலம் விடப்பட உள்ளது, இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக ரூ. 11.70 கோடி மதிப்புடையது.
மேலும், நீரவ் மோடி மற்றும் அவரது குழும நிறுவனமான ஃபயர்ஸ்டோன் டிரேடிங் பிரைவேட் லிமிடெட்-க்கு சொந்தமான இரண்டு பெரிய நில சொத்துக்களையும் ஏலம் விடவும் கடன் மீட்பு தீர்ப்பாயம்-I திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு நில தொகுப்புகளும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளன.
கடன் மீட்பு தீர்ப்பாயம்-I இந்த சோலார் எனர்ஜி ஆலை, ஆடம்பர அப்பார்ட்மென்ட், 2 நில தொகுப்புகள் ஆகியவற்றின் ஆன்லைன் ஏலம் அக்டோபர் 25 ஆம் தேதி மதியம் 2-4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோரின் கடன் மோசடி நாட்டையே உலுக்கியது மட்டும் அல்லாமல் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிலைமையை தலைகீழாக புரட்டிப்போட்டது. நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்சி செய்த மோசடி வெளியாவதற்கு ஒரு நாள் முன்னர் நாட்டை விட்டு இருவரும் குடும்பத்துடன் ஓடினர். நீரவ் மோடி 2019ல் கைது செய்யப்பட்டாலும், இந்தியாவுக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications