கர்சன்பாய் படேல் பெயரை சொன்னவுடன் அம்பானி, அதானி, டாடா போல் பிரபலம் இல்லாத ஒருவராக தெரியலாம், ஆனால் இவருடைய தயாரிப்பின் பெயரை கோட்டால் அம்பானி, அதானியை தெரியாதவர்களுக்கு கூட இவரை தெரியும்.
ஆனால் ஒரு காலத்தில் வாஷிங் பவுடர் என்றாலே இவரது பிராண்டும், அதன் விளம்பரமும் தான் மக்களுக்கு தெரியும். 90களில் விற்பனையில் கொடி கட்டி பறந்த வாஷிங் பவுடர் பிராண்ட் நிர்மாவின் நிறுவனர்தான் கர்சன்பாய் படேல்.

90களில் நிர்மாவின் விளம்பரம் வந்தாலே, பலரும் விளம்பரத்தோடு சேர்ந்து, நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா என்று தங்களை மறந்து பாடுவர். அந்த அளவுக்கு நிர்மா ஒவ்வொரு வீட்டிலும் இடம் பிடித்து இருந்தது. குஜராத்தை சேர்ந்த கோடீஸ்வர தொழிலபதிபர் கர்சன்பாய் படேல் தனது வாழ்க்கையில் படிபடியாக உயர்ந்து முன்னேறியவர்.
கர்சன்பாய் படேல் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். இவர் அகமதாபாத்தில் நியூ காட்டன் மில்ஸ் என்ற ஆலையில் ஆய்வக உதவியாளராக முதலில் பணியாற்றினார். பின்பு, குஜராத் அரசின் புவியியல் மற்றும் சுரங்க துறையில் பணிபுரிந்தார். அதேசமயம், சொந்தமாக தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்து கொண்டே இருந்தது.
இதனையடுத்து அரசாங்க வேலையை ராஜினாமா செய்த பின்னர் தனது வீட்டில் வாஷிங் பவுடர் தயாரித்து, அதனை பாக்கெட்டுகளில் அடைத்து சைக்கிளில் வீடு வீடாக சென்று விற்பனை செய்தார். கர்சன்பாய் படேல் மறைந்த தனது மகள் நிரூபமாவின் நினைவாக வாஷிங் பவுடருக்கு நிர்மா என்று பெயர் வைத்தார்.
நிர்மாவின் உயர்ந்த தரம், குறைந்த விலை ஆகியவை பெரும் மதிப்பை உருவாக்கியது. மேலும் இல்லத்தரசிகள் விரும்பும் வகையில் அமைந்த விளம்பர ஜிங்கிள்கள் உள்ளிட்டவை நிர்மா பிராண்ட் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கர்சன்பாய் படேலின் வர்த்தகமும் எழுச்சி காண தொடங்கியது.
தற்போது உலக அளவில் சோடா ஆஷ் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக நிர்மா உள்ளது. கர்சன்பாய் படேல் நிறுவனம் தற்போது சிமெண்ட், டிட்டர்ஜென்ட், சோப்புகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் ஆகிய வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது.
நிர்மா கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் அகமதாபாத்தில் உள்ள நிர்மா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார் கன்சன்பாய் படேல். போர்ப்ஸ் அறிக்கையின்படி கன்சன்பாய் படேலின் சொத்து மதிப்பு சுமார் ரூ.23 ஆயிரம் கோடி.
கன்சன்பாய் படேலின் வர்த்தக சாம்ராஜ்யத்தை தற்போது அவரது மகள், 2 மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். ராகேஷ் கே படேல் கொள்முதல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவை நிர்வகிக்கிறாார். ஹிரேன் கே படேல் மார்க்கெட்டிங் மற்றும் நிதி பிரிவு தலைவராக உள்ளார். கல்பேஷ் படேல் மேற்பார்வையில் நிறுவனத்தின் மனித வளங்கள் மற்றும் சுகாதாரத் துறை உள்ளது.


Click it and Unblock the Notifications