இந்தியாவில் வரும் 22 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தம் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன் மூலம் பல்வேறு பொருட்களின் விலை கணிசமான அளவு குறைய இருக்கிறது. நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் தொடங்கி கார், இருசக்கர வாகனம் வரை பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகளை மத்திய அரசு குறைத்து இருக்கிறது .
பால் விற்கும் நிறுவனம் தொடங்கி கார் விற்பனை செய்யும் நிறுவனம் வரை தங்களுடைய பொருட்கள் விலை குறைவு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கும் போது மக்களிடையே நுகர்வு போக்கும் அதிகரிக்கும் இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் இந்த ஆண்டு அந்த நுகர்வினை இன்னும் அதிகப்படுத்தும் என அரசு நம்புகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் பொதுமக்கள் கைகளில் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை தெரிவித்திருக்கிறார் .இதன் மூலம் மக்கள் அதிகமான பணத்தை செலவிடுவார்கள் இது நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் ஊக்கம் தரும் எனக் கூறியிருக்கிறார்.
ஜிஎஸ்டி வரி திருத்தம் தொடர்பாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 12% வரியின் கீழ் இருந்த 99% பொருட்கள் 5% வரி விதிப்பின் கீழ் வந்துவிட்டன . இது மிடில் கிளாஸ் மற்றும் ஏழ்மை குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு மிகப்பெரிய பலனை தந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.

பொதுமக்கள் மீது இருக்கக்கூடிய வரி சுமையை குறைக்க வேண்டும் அதே வேளையில் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் ஆகிய இரண்டையும் நோக்கமாகக் கொண்டுதான் ஜிஎஸ்டி கவுன்சில் இந்த வரி சீர்திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது என அப்போது நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் என்பது பொதுமக்களுக்கு பல மடங்கு லாபம் தரும் என்றும் பல்வேறு துறைகளுக்கும் பெரிய அளவில் ஊக்கம் தரும் என்றும் கூறியிருக்கிறார்.
2018 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜிஎஸ்டி மூலம் அரசுக்கு 7.19 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது அது 2025 ஆம் ஆண்டில் 22.08 லட்சம் கோடியாக அதிகரித்திருந்தது என குறிப்பிட்டு இருக்கும் அவர் இதே காலகட்டத்தில் இந்தியாவின் 65 லட்சமாக இருந்த வரி செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது 1.51 கோடி என்ற அளவிற்கு உயர்ந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே மத்திய பட்ஜெட்டில் அரசு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமான ஈட்டுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்ற வகையில் மாற்றம் கொண்டு வந்தது. தற்போது ஜிஎஸ்டி வரி திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இரண்டும் பொதுமக்கள் கைகளில் பெருமளவிலான பணப்புழக்கத்திற்கு வித்திடும் என அரசு நம்புகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications