இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து சாமானிய மக்களால் வாங்க முடியாத நிலைக்கு சென்று விட்டது. இந்த சூழலில் தான் மத்திய அரசு தங்கம், வெள்ளி விலை உயர்வை கட்டுப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என கோடிக்கணக்கான இந்தியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சர்வதேச சூழல்கள் காரணமாக இந்தியாவில் சில்லறை வணிகத்தில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1,33,000 ரூபாயையும், வெள்ளி ஒரு கிலோ 4.20 லட்சம் என்றும் வரலாற்று உச்சபட்ச விலையை எட்டின. அதன் பின் விலை சரிய தொடங்கின. தற்போதைக்கு தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு1.14 லட்சம் முதல் 1.19 லட்சத்திற்குள் ரு ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. வெள்ளியின் விலை ஒரு கிலோ 2.60 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய்க்குள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது.

தற்போதைய சூழலில் ஒரு நபர் ஒரு சவரன் நகை வாங்க வேண்டும் என்றால் கூட கட்டாயம் 1.4 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் தான் மத்திய பட்ஜெட்டிலேயே தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைத்து இவற்றின் விலை குறைவுக்கு அரசு வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த ஒரு அறிவிப்பையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட்டில் வெளியிடவில்லை.
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் வாரிய குழு இயக்குனர்களிடம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கும் விளக்கம் தந்தார். குறிப்பாக தங்கம் எப்போதுமே இந்திய குடும்பங்களின் மிக முக்கியமான ஒரு முதலீடாக இருக்கிறது, இந்தியாவில் திருமண சீசன் காலங்களில் தங்கத்தின் விலை உயரும் என தெரிவித்தார்.
நம் நாட்டிற்கு தேவையான பெரும் அளவிலான தங்கத்தை நாம் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம், நம் நாட்டில் தங்க வளத்தை தேடி அதனை பிரித்து எடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நம்முடைய தேவைக்கு ஏற்ற அளவிலான சப்ளை உள்நாட்டில் கிடையாது. இதனால் தான் நாம் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்கிறோம். இதன் காரணமாக தான் சர்வதேச சூழல்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாறுகிறது என்றார்.
தங்கம் இந்திய குடும்பங்களின் மிகப் பிடித்தமான ஒரு முதலீடு , இந்தியாவில் பண்டிகை காலங்களில் தங்கத்தின் விலை டிமாண்டுக்கு ஏற்ப உயரும் எனக் கூறிய அவர் தங்கத்தின் விலை நிலவரத்தை அரசு கவனித்து வருகிறது, ஆனால் ஆபத்தான அளவை எட்டிருப்பதாக எனக்கு தெரியவில்லை என கூறினார். அதாவது தங்கம் விலை ஒரு குறிப்பிட்ட வரம்பை தாண்டி செல்லவில்லை என நினைக்கிறேன் என பதில் அளித்தார்.
ரிசர்வ் வங்கியும் தங்கம் விலை போக்கை கண்காணிக்கிறது என்ற நிர்மலா சீதாராமன் பெரும்பாலான நாடுகள் குறிப்பாக அவற்றின் மத்திய வங்கிகள் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கி சேமித்து வைக்கின்றன, அது முன்பை விட அதிகரித்துள்ளது இது தான் தங்கம் விலை பெருமளவில் உயர காரணமாகி இருக்கிறது என சுட்டிக்காட்டினார். எனவே தற்போதைக்கு தங்கம் விலையை குறைக்க அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க போவதில்லை என்பது நிர்ம்லா சீதாராமனின் பதில் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications