ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மரில் நடைபெற்று வரும் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏஏசி பிளாக்ஸ், வலுப்படுத்தப்பட்ட அரிசி (fortified rice kernels) மற்றும் சுவையூட்டப்பட்ட பாப் கார்ன் ஆகியவற்றின் வரி விகிதங்களை தெளிவுபடுத்துவது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ACC பிளாக்: ஆட்டோக்ளேவ் ஏரேட்டட் கான்கிரீட் (ACC) பிளாக்ஸ் 50% க்கும் அதிகமான ஃப்ளை ஆஷ் உடன் தயாரிக்கப்பட்டு இருந்தால், அவை HS குறியீடு 6815 இன் கீழ் வரும், இதனால் இதற்கு 18%க்கு பதிலாக 12% குறைந்த ஜிஎஸ்டி விகிதத்திற்கு உட்படும் என்று இதற்கான விளக்கம் கொடுப்படும் என தெரிவித்துள்ளார்.

செகண்ட் ஹேண்ட் கார்: மேலும், நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்கள் உட்பட எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையில் வரியை 12% -லிருந்து 18% ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அரிசி: வலுப்படுத்தப்பட்ட அரிசி விதைகளுக்கான (fortified rice kernels) ஜிஎஸ்டி அமைப்பை எளிமைப்படுத்தவும் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இறுதி பயன்பாட்டைப் பொருட்படுத்தாமல் வலுப்படுத்தப்பட்ட அரிசி விதைகளுக்கான வரி விகிதத்தை 5% ஆகக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாப்கார்ன்: ஜிஎஸ்டி கவுன்சில் ரெடி-டு-ஈட் பாப் கார்னில் விதிக்கப்படும் வரியைப் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளது. உப்பு மற்றும் மசாலா கலந்த பாப் கார்ன், நான்கீன்ஸ் போன்ற தோற்றத்தில் இருந்தால், முன்கூட்டியே பேக்கிங் செய்யப்படாமல் மற்றும் லேபிளிடப்படாமல் வழங்கப்பட்டால் 5% ஜிஎஸ்டி மற்றும் முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்டு லேபிளிடப்பட்டால் 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
கேரமல் பாப் கார்ன்: இருப்பினும், கேரமல் பாப் கார்ன் போன்ற சர்க்கரை கலந்த பாப் கார்ன் அதன் அத்தியாவசிய தன்மையை மாற்றி சர்க்கரை கலவை ஆக மாறும் மற்றும் HS 1704 90 90 இன் கீழ் வகைப்படுத்தப்பட்டு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் தெரிவுப்படுத்தியுள்ளது.
ஆயுள் காப்பீடு: இதேவேளையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் மீதான விவாதத்தை ஏற்கவில்லை என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications