இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வாராக் கடன் பிரச்சனையைத் தீர்க்கவும், வங்கிகளின் சுமையைக் குறைவும், அதேவேளையில் வாராக் கடன்களுக்கு விரைவில் தீர்வு காணவும், கடனை வசூல் செய்யவும் வாரக் கடன் வங்கி அமைக்க நிதியமைச்சகமும், வங்கி அமைப்புகளும் முடிவு செய்தது.
நிர்மலா சீதாராமன் திட்டம்
மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் வாராக் கடன் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது
30,600 கோடி ரூபாய் உத்தரவாதம்
இது மட்டும் அல்லாமல் வாராக் கடன் வங்கி இயங்குவதற்கும், வாராக்கடன் சொத்துகளையும், கணக்குகளையும் மறுசீரமைப்பு செய்வதற்காக இந்திய அரசு சுமார் 30,600 கோடி ரூபாய் அளவிலான உத்தரவாதம் அளிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
NARCL அமைப்பு
இந்த வாராக் கடன் வங்கியை National Asset Reconstruction Company Ltd (NARCL) என அழைக்கப்படுகிறது, சுருக்கமாகவும் அதை Bad Loan Bank எனவும் அளிக்கப்படுகிறது.
பங்கு இருப்பு அளவீடுகள்
இப்புதிய வங்கியில் பொதுத்துறை வங்கிகள் 51 சதவீத பங்குகளை வைத்திருக்கும், பொதுத்துறை நிதியியல் முதலீட்டாளர்கள் மீதமுள்ள 49 சதவீத பங்குகளை வைத்திருக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
6000 கோடி ரூபாய் முதலீடு
NARCL அமைப்பு ஜூலை மாதம் மும்பையில் நிறுவப்பட்டு, 8 பொதுத்துறை வங்கிகள் பங்குகளைப் பெற உள்ளது மட்டும் அல்லாமல் சுமார் 6000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த NARCL அமைப்பு அல்லது வாராக் கடன் வங்கி அமைக்கப்பட உள்ளது.
ரூ. 5.01 லட்சம் கோடி வாரக் கடன்
மேலும் இந்தியாவில் கடந்த 6 நிதியாண்டில் மட்டும் சுமார் 5.01 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வாராக் கடனை திரும்பப்பெறப்பட்டு உள்ளது. இதில் மார்ச் 2018ல் இருந்து மட்டும் சுமார் 3.1 லட்சம் ரூபாய் அளவிலான வாராக் கடன் திரும்ப வசூலிக்கப்பட்டு உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
லாபம் நஷ்டம்
2018ல் 21 பொதுத்துறை வங்கிகளில் இரு வங்கிகள் மட்டுமே லாபகரமாக இருந்தது, ஆனால் 2021ல் வெறும் 2 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே நஷ்டத்தில் உள்ளது என்பதைப் பெருமையுடன் கூற முடியும் எனவும் இக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அடிப்படை திட்ட வடிவம்
மேலும் இந்திய அரசின் 30,600 கோடி ரூபாய் உத்தரவாதத்துடன் துவங்கப்பட்டு உள்ள NARCL அமைப்பு Recognition, Resolution, Recapitalisation, Reforms ஆகிய கட்டமைப்பு அடிப்படையில் தான் இயங்கும், இதன் அடிப்படையில் தான் கடந்த 6 வருடம் 5,01,479 கோடி ரூபாய் அளவிலான வாராக் கடனை திரும்பப்பெற்றோம் எனவும் மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.
அரசின் மறு முதலீடு
இந்திய வங்கிகளில் மத்திய அரசு 2017-18 நிதியாண்டில் ரூ.90,000 கோடியும், 2018-19 நிதியாண்டில் ரூ. 1.06 லட்சம் கோடியும், 2019-20 நிதியாண்டில் ரூ. 70,000 கோடியும், 2020-21 நிதியாண்டில் ரூ. 20,000 கோடியும், 2021-22 நிதியாண்டில் ரூ. 20,000 கோடியும் மறு முதலீடு செய்துள்ளது.
உரிமம் பெறவில்லை
NARCL அமைப்பு ஜூலை மாதம் மும்பையில் நிறுவப்பட்டாலும், ரிசர்வ் வங்கியிடம் இருந்து இன்னமும் உரிமம் பெறவில்லை என்பது மிக முக்கியமான ஒன்று, ஆயினும் மத்திய அரசு NARCL அமைப்பிற்கு 30,600 கோடி ரூபாய் உத்தரவாதத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
இதேபோல் NARCL அமைப்பு தேவையான அனைத்து ஆதாரங்களையும் திட்ட வடிவங்களையும் ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், விரைவில் இந்த அமைப்பிற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications