ஜிஎஸ்டி கவுன்சில் இந்தியாவின் மறைமுக வரி அமைப்பில் பெரிய மாற்றங்களை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாற்றங்கள் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வர உள்ளன, இதனால் தினசரி பயன்படுத்தப்படும் பல பொருட்களின் விலை குறையும். இதேபோல் பல பொருட்கள் விலை உயர உள்ளது.
சில தீங்கு பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அதிகப்படியான வரி சுமையை சந்திக்க உள்ளது, அதே நேரம் நிலக்கரி மீதான வரி அதிகரிக்கப்பட உள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இந்த மாற்றங்கள் பொருளாதாரத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீங்கு பொருட்கள்:
ஜிஎஸ்டி கவுன்சில், தீங்கு பொருட்களுக்கு உயர்ந்த வரி விகிதத்தை தொடர்ந்து வைத்திருக்கும். பான் மசாலா, குட்கா, சிகரெட், புகையிலை, ஜர்தா, உற்பத்தி செய்யப்படாத புகையிலை மற்றும் பீடி போன்றவை தற்போதைய உயர்ந்த ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் இழப்பீட்டு செஸ் கீழ் தொடரும். புகையிலை பொருட்கள் மீது 40 சதவீத வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மாற்றமின்றி நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது இழப்பீட்டு கடன்கள் தீர்க்கப்படும் வரை அமலில் இருக்கும்.
மேலும், புகையிலை பொருட்களின் மதிப்பீடு தற்போதைய பரிவர்த்தனை மதிப்பிலிருந்து சில்லறை விற்பனை விலை (RSP) அடிப்படையில் மாற்றப்படும், இது வரி விதிப்பு இணக்கத்தை இறுக்கமாக்கும் என ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது.
40 சதவீத வரி
சர்க்கரை அல்லது இனிப்பு சேர்க்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் (ஏரேட்டெட் வாட்டர் உட்பட) 28% இலிருந்து 40% ஆக உயர்த்தப்படும்.
ஆடம்பர பிரிவு
ஆடம்பர மற்றும் விலை ஆடம்பர பொருட்களுக்கு புதிய 40% விகிதம் அமல்படுத்தப்படும், இதனால் சிகரெட், உயர்தர மதுபானங்கள் மற்றும் ப்ரீமியம் கார்கள் போன்றவை வரி நிவாரணம் பெறாது.
இறக்குமதி செய்யப்படும் ஆர்மோர்டு லக்சுரி செடான்கள் சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே விலக்கு பெறும், உதாரணமாக ஜனாதிபதி செயலகத்தால் கொண்டுவரப்படும் வாகனங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்.
எரிசக்தி மற்றும் எரிபொருள்களுக்கு வரி உயர்வு
நிலக்கரி தற்போது 5% வரி விகிதத்தில் இருந்து 18% ஆக உயர்த்தப்படும், இது நிலக்கரி அடிப்படையிலான தொழில்களின் செலவை அதிகரிக்கும்.
சேவைகளுக்கு புதிய வரி
இனி "குறிப்பிட்ட இடங்களில்" செயல்படும் உணவகங்கள் இனி 18% விகிதத்துடன் உள்ளீடு வரி கடன் (ITC) விருப்பத்தை தேர்ந்தெடுக்க முடியாது.
சில லாட்டரி மற்றும் இடைத்தரகர் சேவைகளுக்கு மறுவரையறை செய்யப்பட்ட மதிப்பீட்டு விதிகள் அமல்படுத்தப்படும், இதனால் அவற்றின் வரி சுமை தொடரும் அல்லது அதிகரிக்கும்.
இந்த மாற்றங்கள் குறித்த முழுமையாக தகவல் நாளை செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications