டெல்லி: ஜிஎஸ்டி வரிமுறையில் பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிலையில் அது தொடர்பான பணிகளையும் ஒருபுறம் தீவிரப்படுத்தி இருக்கிறது.
ஜிஎஸ்டி வரி :பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய சுதந்திர தின உரையில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இந்தியாவில் ஜிஎஸ்டி வரிமுறையில் பெரிய சீர்த்திருத்தம் கொண்டு வரப் போகிறோம், இதன் மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் விலை குறைய போகிறது என்ற நற்செய்தியை வெளியிட்டார். இதனை அடுத்து மத்திய அரசு ஜிஎஸ்டி வரிமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை அளித்து இருக்கிறது.

நாளை முக்கிய ஆலோசனை: 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டு ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என அரசு தன்னுடைய பரிந்துரையில் குறிப்பிட்டு இருக்கிறது. இவ்வாறு ஜிஎஸ்டி வரிமுறையில் கொண்டு வரப்படக்கூடிய இந்த சீர்திருத்தம் பல்வேறு பொருட்களின் விலையை குறைக்க போகிறது. இந்த சூழலில் ஆகஸ்ட் 20ஆம் தேதி ஆன நாளைய தினம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் Group of Ministers எனப்படும் அமைச்சர்களுக்கான குழுவினரை சந்தித்து பேச இருக்கிறார்.
நிதி அமைச்சர் பங்கேற்பு: இந்த கூட்டத்தில் மத்திய அரசு பரிந்துரைக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைக்க இருக்கிறார். ஜிஎஸ்டி வரி திருத்தம் தொடர்பாக இரண்டு நாட்களுக்கு குரூப் ஆஃப் மினிஸ்டர்ஸ் எனப்படும் அமைச்சர்கள் குழுவின் கூட்டம் நடைபெற இருக்கிறது. நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கும் இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது .

2 நாட்கள் கூட்டம்: இந்த கூட்டத்தில் மத்திய அரசு அளித்திருக்கும் ஜிஎஸ்டி வரி சீர்திருத்த பரிந்துரை குறித்து முக்கியமான ஆலோசனை நடத்தப்படும். மத்திய அரசு கூறியபடி வரியை 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டாக மட்டுமே கொள்வது, புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பது மற்றும் காம்பன்சேஷன் செஸ் வரியை நீக்குவது, காப்பீடு திட்டங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து முக்கிய முடிவு எடுப்பது என பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் இந்த இரண்டு நாட்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.
முதன்முறையாக நிர்மலா சீதாராமன் பங்கேற்பு: பொதுவாக இந்த அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சருக்கு எந்த ஒரு பொறுப்பும் இல்லை அவர் உறுப்பினரும் இல்லை, ஆனால் அரசின் இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்திற்கான பின்னணி குறித்து எடுத்துரைப்பதற்காக முதன்முறையாக நிர்மலா சீதாராமன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார் . ஜிஎஸ்டி கவுன்சிலை பொருத்தவரை மூன்று விஷயங்களுக்கு அமைச்சர்கள் குழுவை நியமனம் செய்திருக்கிறது.
அமைச்சர்கள் குழு: பீகார் மாநில துணை முதலமைச்சர் சாம்ராஜ் சவுத்ரி தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து ஆய்வு செய்கிறது. மத்திய நிதித்துறை இணை அமைச்சரான பங்கஜ் சவுத்ரி தலைமையிலான அமைச்சர்கள் குழு காம்பன்சேஷன் செஸ் வரி குறித்த விவரங்களை ஆய்வு செய்ய இருக்கிறது.
அடுத்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மத்திய அரசின் பரிந்துரையை அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டால் அடுத்ததாக இந்த விவகாரம் ஜிஎஸ்டி கவுன்சிலின் ஆலோசனைக்கு செல்லும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் மற்றும் அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்பார்கள். அடுத்த மாதம் அந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. எனவே அதில் அனுமதி வந்தால் பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே பல்வேறு பொருட்களின் விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications