மும்பை பங்குச்சந்தை நடத்திய ViksitBharat 2047 கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை பேசிய போது ரீடைல் முதலீட்டாளர்களுக்கு பெரும் எச்சரிக்கை விடுத்தார்.
இன்று நாட்டு மக்கள் அதிகளவில் டெரிவேட்டிவ் சந்தையில் முதலீடு செய்ய துவங்கியுள்ள நிலையில், இதில் தொடர்புடைய ஆபத்துகள் குறித்து சில்லறை முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளார். பியூச்சர் மற்றும் ஆப்ஷன்ஸ் டிரேடிங்-ல் (எஃப்&ஓ) கணிக்கப்படாத பாதிப்பு ஏற்படும் போது ரீடைல் முதலீட்டாளர்களின் குடும்ப சேமிப்பில் சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

இதே ViksitBharat 2047 கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி தற்போது இந்தியா முழுவதும் டிரெண்டிங் ஆகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமனிடம் ஒருவர் பங்குச்சந்தை ப்ரோக்கர்களை காட்டிலும் மத்திய அரசு ஜிஎஸ்டி, எஸ்டிடி என வரி மற்றும் கட்டணங்கள் மூலம் அதிகப்படியாக சம்பாதிக்கிறது என்றும், மத்திய அரசு ஸ்லீப்பிங் பார்ட்னராகவும், ப்ரோக்கரேஜ் நிறுவனங்கள் வொர்க்கிங் பார்ட்னராகவும் இயங்குவதாக தெரிவித்தார்.
இதேபோல் ரியல் எஸ்டேட் துறையில் பணமாக பரிவர்த்தனை செய்ய கூடாது என சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர், என்னுடைய வங்கி கணக்கில் இருக்கும் பணத்தில் (வரி செலுத்தப்பட்டு பின்பு வைத்திருக்க கூடிய பணம்) வீடு வாங்கினால் மும்பை போன்ற நகரங்களில் 11 சதவீத வரி, ஜிஎஸ்டி, ஸ்டாம்ப் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது.
இப்படியிருக்கும் வேளையில் எங்களை போன்ற ப்ரோக்கரேஜ்-களுக்கு எப்படி உதவுவீர்கள்? என கேட்டதற்கு நிர்மலா சீதாராமன் பதில் பேச முடியாமல் திணறியது மட்டும் அல்லாமல் ஸ்லீப்பிங் பார்ட்னர் இந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு பதில் கூறமாட்டார் என சிரித்துக்கொண்டே பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Do see pic.twitter.com/CqKkJdJtOe
— Jitendra Jain (@jitendrajain) May 16, 2024
பியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன் வர்த்தகம் குறித்து நிர்மலா சீதாராமன் பேசுகையில் "எப்&ஓ ரீடைல் வர்த்தகத்தில் சரிபார்க்கப்படாமல் செய்யப்படும் முதலீடுகளில் ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால், இது பங்குச் சந்தை முதலீட்டுக்கு மட்டுமல்ல (ஆனால்) முதலீட்டாளர் உணர்வுக்கும் மற்றும் குடும்பத்தின் சேமிப்புகளுக்கும் மோசமான சவால்களை உருவாக்கலாம்" என்று நிதியமைச்சர் கூறினார்.
"குடும்ப சேமிப்பு ஒரு தலைமுறையை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அவற்றைப் பாதுகாக்க வேண்டும்." என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். அதே நேரத்தில் எப்&ஓ ரீடைல் வர்த்தகத்தில் இருக்கும் ஆபத்துக்களை களைந்து முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்க பங்குச்சந்தை எக்ஸ்சேஞ்ச்களான NSE, BSE மற்றும் சந்தைக் கட்டுப்பாட்டாளரான Sebi ஆகியவை இணைந்து பணியாற்றவும், உறுதியான வர்த்தக இணக்கம் மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை கொண்டுவர வலியுறுத்தினார்.
பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகியவை எப்&ஓ ரீடைல் வர்த்தகத்தில் இருக்கும் அபாயத்தைத் தணிக்க வேண்டும், சந்தை ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும் செபி மேற்கொண்ட ஆய்வில், 10 சில்லறை முதலீட்டாளர்களில் 9 பேர் எப்&ஓ சந்தையில் தங்கள் முதலீடுகளில் இழப்பை சந்திக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications