இந்தியாவின் பணக்கார குடும்பம் என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது அம்பானி குடும்பம் தான். நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி ஒவ்வொரு நிமிடமும் பல கோடிகளை வருமானமாக பெறுபவர்.
பணக்கார குடும்பம் என்பதாலேயே முகேஷ் அம்பானி அவரது மனைவி நீதா அம்பானி இவர்களின் மகன்கள் ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி, மகள் ஈஷா அம்பானி ஆகியோரின் ஒவ்வொரு நகர்வுகளும் செய்தியாகிவிடும். குறிப்பாக நீதா அம்பானி மற்றும் ஈஷா அம்பானி ஆகியோர் அணியும் ஆடைகள் , நகைகள், ஹேண்ட் பேக்குகள் ஃபேஷன் உலகில் பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தும். அந்த வகையில் நீதா அம்பானி உலகிலேயே காஸ்ட்லியான குடிநீரை வாங்கி பருகுவதாக வெளியான ஒரு தகவல் தான் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறது.

நீதா அம்பானி பயன்படுத்துவதாக கூறப்படும் அந்த தண்ணீர் பாட்டில், உலகின் விலை உயர்ந்த தண்ணீர் பிராண்டுகளில் ஒன்றான 'அக்வா டி கிரிஸ்டாலோ மோடிலியானி' (Acqua di Cristallo Tributo a Modigliani) என்ற பிராண்டைச் சேர்ந்தது. இந்த தண்ணீர் பாட்டில் 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டது. புகழ்பெற்ற கலைஞரான அமேடியோ மோடிலியானியின் கலைப்படைப்பால் ஈர்க்கப்பட்டு இந்த பாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாட்டிலில் உள்ள தண்ணீர் பிரான்ஸ் மற்றும் பிஜி தீவுகள், ஐஸ்லாந்து ஆகிய இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டது. அதாவது உலகிலேயே மிகவும் தூய்மையான ஒரு தண்ணீர் , இதில் தங்கம் கலந்த நீர் இருப்பதாகக் கூறப்படுகிறது, இது மனித ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று அதன் உற்பத்தியாளர்கள் விளம்பரம் செய்கின்றனர். மேலும் சாதாரண தண்ணீரை விட அதிக எனர்ஜி தரக்கூடியதாம்.

சமூக வலைதளங்களில் நீதா அம்பானி இந்த பாட்டிலில் தண்ணீர் அருந்துவதாக ஒரு புகைப்படம் வைரலானதால் இது நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. இந்த ஒரு பாட்டிலின் விலையே 44 லட்சம் ரூபாய். உலகின் மிக விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கு மூன்று காரணம் ஒன்று இதில் இருக்கும் தண்ணீர் உலகிலேயே மிக தூய்மையானது, தங்கம் கலந்திருப்பது மற்றும் தங்கம் முலாம் பூசப்பட்ட பாட்டிலாக இருப்பது.
இந்த ஒரு பாட்டில் தண்ணீரின் விலை தான் பெரும்பாலான இந்திய குடும்பங்களில் வாழ்நாள் வருமானம். இரண்டாம் நிலை நகரங்களில் இந்த விலைக்கு ஒரு வீடே வாங்கிவிட முடியும். நீதா அம்பானி இந்த பாட்டிலில் தண்ணீர் பருகுவதாக வெளியான புகைப்படம் உண்மையில்லை அது மார்ஃபிங் செய்யப்பட்டது என ஒரு சாரார் கூறுகின்றனர். இருந்தாலும் உலகில் இப்படி விலை உயர்ந்த குடிநீரும் கூட இருக்கிறது என்ற தகவல் கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு புதிதான ஒன்று தான்.


Click it and Unblock the Notifications

