டீசல் வாகனங்கள் விற்பனைக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் தான் இருப்பதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நித்தின் கட்கரி தனது டிவிட்டரில் தெரிவித்தார்.
63வது SIAM வருடாந்திர கூட்டத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நித்தின் கட்கரி டீசல் என்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி வரி மாசு வரி அதாவது pollution tax ஆக விதிக்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியானது. இதன் மூலம் ஆட்டோமொபைல் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது.

இந்த நிலையில் இந்த கருத்தை தெளிவுப்படுத்தியாக வேண்டும் என டிவிட்டரில் கூறிய நித்தன் கட்கரி அரசாங்கத்தின் தீவிர பரிசீலனையில் தற்போது அத்தகைய திட்டம் இல்லை என்பதை தெளிவுபடுத்துவது அவசியம் என கூறினார்.
2070க்குள் கார்பன் நெட் ஜீரோ இலக்கை அடைவதற்கும், டீசல் போன்ற மாசுபாடு நிறைந்த எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கும், ஆட்டோமொபைல் விற்பனையில் விரைவான வளர்ச்சிக்கும் ஏற்ப, தூய்மையான மற்றும் பசுமையான மாற்று எரிபொருளை தீவிரமாக ஏற்றுக்கொள்வது அவசியம்.
இது நாட்டின் எரிபொருட்கள் இறக்குமதி மாற்றுகளாகவும், செலவு குறைந்ததாகவும், சுதேசி மற்றும் மாசு இல்லாத எரிபொருளாகவும் இருக்க வேண்டும் என்று டிவிட்டரில் தான் நித்தின் கட்கரி விளக்கம் கொடுத்தார்.
இதனால் ஆட்டோமொபைல் நிறுவன பங்குகள் மீது முதலீடு திரும்பவும், பங்கு விலை உயரவும் துவங்கியுள்ளது. நித்தின் கட்கரி பல வருடமாக மாற்று எரிபொருள் விற்பனை குறித்து நீண்ட காலமாக பேசிவருவது மட்டும் அல்லாமல் செயல்பாட்டிலும் கொண்டு வந்துள்ளார்.
உதாரணமாக சமீபத்தில் 100 சதவீதம் எத்தனால் எரிபொருளில் இயங்கும் டோயோட்டா இன்னோவா ஹைய்கிராஸ் கார்-ஐ அறிமுகம் செய்தார். இது வெறும் துவக்கம் மட்டும் அல்லாமல் ஜி20 கூட்டத்தில் பயோபியூயல், 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை குறித்தும் மத்திய அரசு பேசி உள்ளது.


Click it and Unblock the Notifications