மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நித்தின் கட்கரி, டீசல் என்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி விதிக்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த புதிய 10 சதவீத வரியை 'மாசு வரி அதாவது pollution tax' என்று அழைக்க உள்ளதாக நிதின் கட்கரி 63வது SIAM வருடாந்திர கூட்டத்தில் பேசினார். மேலும் இந்த வரி தான் நாட்டில் டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க ஒரே வழி என்றும் இக்கூட்டத்தில் பேசியுள்ளார் நித்தின் கட்கரி.

SIAM வருடாந்திர கூட்டத்தில் 10 சதவீத மாசு வரி குறித்து மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி பேசியதை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையில் 12 மணியளவில் M&M நிறுவன பங்குகள் 2.38 சதவீதமும், Tata Motors நிறுவன பங்குகள் 2 சதவீதமும், Maruti Suzuki நிறுவன பங்குகள் 0.8 சதவீதமும் சரிந்து வர்த்தகமானது.
டீசல் வாகனங்களின் உற்பத்தியைக் குறைக்க தொழில்துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட வேண்டும், இல்லையெனில் கூடுதல் வரி விதிக்க வேண்டும். டீசல் வாகனங்களின் உற்பத்தியைக் குறைக்குமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன். நீங்கள் குறைக்கவில்லை என்றால், நாங்கள் வரியை அதிகரிப்போம், இதனால் டீசல் வாகனங்களின் விலை உயர்ந்து விற்பனை செய்ய கடுமையான சூழ்நிலை ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு உருவாகும் என 63வது SIAM வருடாந்திர கூட்டத்தில் நத்தின் கட்கரி கூறினார்.
இதற்கு மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி தனது டிவிட்டரில், அரசாங்கத்தின் தீவிர பரிசீலனையில் தற்போது அத்தகைய திட்டம் இல்லை என்பதை தெளிவுபடுத்துவது அவசியம் என கூறினார்.
டீசல் வாகனங்களுக்கு எதிராக நித்தின் கட்கரி பலமுறை பேசியிருந்தாலும், அதன் பயன்பாட்டை குறைப்பது குறித்தும், மாற்றும் எரிபொருள், மாற்று தொழில்நுட்பம் குறித்து தான் அதிகம் பேசினார். முதல் முறையாக டீசல் வாகனங்கள் மீது 10 சதவீதம் வரி விதிக்கப்படுவது குறித்து நித்தின் கட்கரி பேசியதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடுமையாக பாதித்துள்ளது.
2021ஆம் ஆண்டில், நித்தின் கட்கரி அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களையும் டீசல் எஞ்சின் வாகனங்களை உற்பத்தி மற்றும் விற்பனையை குறைக்க வேண்டும், அதற்காக அனைத்து முனையிலும் முடிவுகளை எடுக்க வாகன உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதேநேரத்தில் பிற தொழில்நுட்பங்களை குறிப்பாக FLES TECHNOLOGY ஊக்குவிக்க வலியுறுத்தினார்.
சுற்றுசூழல் மிகவும் மாசுபட்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியா காலநிலைக்கு ஏற்ற வாகனங்களை மேம்படுத்துவதையும், சுற்றுசூழல் பாதிப்பை வேகமாக குறைக்கும் நோக்கத்தில் உறுதியாக உள்ளது. இதற்காக சர்வதேச அளவில் செய்யப்பட்ட ஒப்பந்தம் படி நெட் ஜீரோ இலக்கையும் மோடி தலைமையிலான மத்திய அரசு வகுத்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து வணிக வாகனங்கள் அதாவது டிரக், கண்டெயினர் போன்ற கனரக வாகனங்கள் பொதுவாக டீசல் எரிபொருளில் இயங்குவதால், இந்த வாகனங்கள் தொடர்ந்து கூடுதல் மாசுப்பாட்டை இந்திய சுற்றுசூழலுக்கு ஏற்படுத்துகிறது.
எனவே டீசலில் இயங்கும் அத்தகைய வாகனங்களுக்கு 10% கூடுதல் ஜிஎஸ்டி விதித்து இதன் விற்பனையை குறைத்தால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்கும் என்ற திட்டத்தில் மத்திய நிதியமைச்சகத்திடம் 10 சதவீத மாசு வரியை டீசல் வாகனங்கள் மீது மட்டும் விதிக்க பரிந்துரைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிகரெட்-க்கு எப்படி SIN TAX பயன்பாட்டில் உள்ளதோ, இதேபோல் டீசல் வாகனங்களுக்கு POLLUTION TAX.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications