இந்திய தேசிய உணவக சங்கம் (NRAI) அக்டோபர் 3 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் உணவகங்கள் உணவு கட்டணத்துடன் சேவைக் கட்டணத்தை விதிக்க எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை என கூறியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் பல உணவகங்கள் உணவுக்கான பில்களில் ஜிஎஸ்டி வரிக்கு மேல் சேவை கட்டணம் என தனியாக விதித்து வந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது ஏற்கனவே ஜிஎஸ்டி மூலம் அதிக பணத்தை வசூலிக்கும் போது சேவை கட்டணமும் தனியாக விதிக்கப்படுவது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்பட்டது.

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இந்திய தேசிய உணவக சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லலித் பாசின், சேவைக் கட்டணம் என்பது உணவகத்தின் நிர்வாகத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையேயான ஒப்பந்தம் என்றும், இது தொழிலாளர் பிரச்சினையாக இருப்பதால் தொழிலாளர் அமைப்புகள் மட்டுமே தீர்க்க முடியும் என்றும் வாதிட்டார்.
மேலும் வழக்கறிஞர் லலித் பாசின் படி, உணவகங்கள் சேவைக் கட்டணங்களை விதிப்பதைத் தடைசெய்யும் உத்தரவை வெளியிடுவதற்கு நுகர்வோர் விவகாரத் துறைக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.
தொழிலாளர் நீதிமன்றங்கள் மற்றும் Monopolies and Restrictive Trade Practices (MRTP) கமிஷன் ஆகியவை சேவைக் கட்டணங்களை விதிக்கும் உணவகங்களின் நடைமுறையை ஏற்கனவே உறுதி செய்துள்ளன என்றும் வழக்கறிஞர் லலித் பாசின் வாதிட்டார்.
மேலும் சேவை கட்டணம் குறித்து வாடிக்கையாளருக்கு தெரிவிக்கப்படும் வரை சேவைக் கட்டணம் விதிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். இருப்பினும், வாடிக்கையாளருக்குத் தெரியாமல் அவர்களுடைய பில்லில் 'மறைக்கப்பட்ட சேவைக் கட்டணம்' சேர்ப்பதை அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் இந்திய தேசிய உணவக சங்கம் சார்பாக நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியது.
இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மீண்டும் தொடர உள்ளது. இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கங்களின் கூட்டமைப்பு (FHRAI) நவம்பர் 8 ஆம் தேதி தனது வாதங்களை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 5 ஆம் தேதி FHRAI அமைப்பில் பதிவு செய்யப்பட்டு உள்ள ரெஸ்டாரென்ட் மற்றும் ஹோட்டல்கள் staff contribution பெயரில் சர்வீஸ் சார்ஜ் விதிக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டு குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீர்ப்பில் சேவை கட்டணம் பில் தொகையில் 10 சதவீதத்திற்கு மேல் விதிக்க கூடாது என்றும், சேவை கட்டணம் குறித்து மெனு கார்டில் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications