இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக குழுமங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி குழுமமும் 'no-poaching pact' ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு பெரும் நிறுவனர்களும் இன்று வரை நேருக்கு நேர் மொதிக்கொள்ளவிலை என்பது போல இருந்தாலும் சமீபத்திய அறிவிப்புகள் மோதிக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்துவது போலும் உள்ளது.
ஆற்றல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வணிகங்கள் வெளிப்படையான போர்க்களமாக உள்ளன. இந்நிலையில் இருவர் இடையிலும் செய்யப்பட இருக்கும் 'No-poaching pact' ஒப்பந்தம் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
இந்தியா
இந்தியாவில் 'No-poaching pact' ஒப்பந்தங்கள் இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் போடப்படுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. ஏற்கனவே பெப்ஸி - கோகோ கோலா, இபோசிஸ் - விப்ரோ, இந்துஸ்தான் யூனிலீவர் - ஐடிசி நிறுவனங்கள் இடையில் திறன் படைத்த ஊழியர்களை இருவருக்கும் இடையில் எடுக்க கூடாது என ஒப்பந்த உள்ளது.
'No-poaching pact' ஒப்பந்தம் என்றால் என்ன?
இரண்டு நிறுவனங்கள் இடையில் 'No-poaching pact' ஒப்பந்தம் போடப்பட்டால், ஒரு நிறுவனத்தில் உள்ள திறன் படைத்த ஊழியர்களை அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுக்க கூடாது என்பதே 'No-poaching pact' ஒப்பந்தம் ஆகும். இதனை ஊழியர்களை வேட்டையாடுதல் என தமிழில் கூறலாம்.
ஊழியர்கள் வெளியேற்றம்
கொரோனாவுக்கு பிறகு ஐடி ஊழியர்கள் அதிகளவில் ராஜினாமா செய்வது அதிகரித்துள்ளது. இவர்கள் போட்டி நிறுவனங்கள் செல்வதும் அதிகரித்துள்ளது. மேலும் ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட திட்டப் பணிகளில் உள்ள ஒருவர் போட்டி நிறுவனத்திலும் அதே திட்டத்தின் பணிகளில் வேலை செய்ய கூடாது என்னவெல்லாம் ஐடி நிறுவனங்கள் சண்டையிட்டு வருகின்றன. அதற்கும் மேலாக அதிக சம்பளத்திற்காகப் போட்டி நிறுவனங்களுக்கு ஊழியர்கள் செல்வதும், அதனால் நிறுவனங்களின் பணிகள் தாமதமாகவும் பெரும் பிரச்சனைகளாக உள்ளதாகக் கூறுகின்றனர்.
அதானி - அம்பானி
இப்போது அதானி - அம்பானி இடையில் 'No-poaching pact' ஒப்பந்தம் நிறைவேறினால் ரிலையன்ஸ் ஊழியர்களால் அதானி குழுமத்திலும், அதானி குழும் ஊழியர்களால் ரிலையன்ஸிலும் வேலைக்கு சேர முடியாத நிலை உருவாகும். இது இரண்டு நிறுவனங்கள் ஊழியர்கள் இடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்ப்பு
'No-poaching pact' ஒப்பந்தத்தால் ஊழியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறனர். குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் நிலைக்க்கு தள்ளப்படுகின்றனர். ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்குப் பணி மாறுவது ஊழியர்களின் உரிமை என அமெரிக்காவில் வாஷிங்டன் அரசு அதற்கு எதிரான சட்டங்களையே நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications