பெங்களூரு: இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. யுபிஐ நடைமுறைக்கு வந்ததே இதற்கு முக்கிய காரணம். நாம் எங்கு சென்றாலும் கையில் பணம் கொண்டு செல்ல வேண்டும் என்று அவசியம் கிடையாது. நம்முடைய செல்போன் வாயிலாக ஒரு க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அல்லது செல்போன் நம்பரை உள்ளீடு செய்தாலே யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமா அவர்களுக்கு அனுப்பி விடலாம்.
யுபிஐ பேமெண்ட்: ஒரு சிறிய பூக்கடையில் தொடங்கி பெரிய பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் வரை நாம் தற்போது யுபிஐ பேமெண்ட் செயலிகளான ஜிபி, போன்பே போன்ற செயலிகளை பயன்படுத்தியே பணத்தை செலுத்துகிறோம். இது மிகவும் எளிமையானதாக இருப்பதால் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் யூபிஐ பேமென்ட் சேவைகள் தற்போது பரவி கிடக்கின்றன. ஆனால் பெங்களூருவை சேர்ந்த சில வணிகர்கள் திடீரென தங்களுடைய கடைகளில் இனி யுபிஐ பேமென்ட் ஏற்றுக்கொள்ள மாட்டோம் பணம் மட்டுமே இங்கே செல்லும் என ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார்கள்.

வியாபாரிகள் அறிவிப்பு: பலரும் தங்கள் கடைகளில் ஒட்டி இருந்த கியூ ஆர் கோடு ஸ்டிக்கர்களை நீக்கி விட்டார்களாம். இந்தியாவின் ஸ்டார்ட் அப் நகரம் ஐடி தலைநகரம் என பெயர் போன பெங்களூருவில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருப்பது தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் யுபிஐ பரிவர்த்தனைகளில் 7 சதவீதம் கர்நாடகாவில் தான் நடக்கிறது. டெக் நகரமான பெங்களூருவில் யுபிஐ பரிவர்த்தனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பணம் மட்டுமே ஏற்பு: இந்நிலையில் சிறு வணிகர்கள் பலரும் யுபிஐ பேமெண்ட் ஏற்க மாட்டோம் பணம் இருந்தால் செலுத்துங்கள் இல்லை என்றால் இங்கே வராதீர்கள் என கூறுவதாக பெங்களூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். ஜிஎஸ்டி அதிகாரிகளே வணிகர்களின் இந்த முடிவுக்கு காரணம் என தெரிய வந்திருக்கிறது. ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக கர்நாடக வணிக வரி அதிகாரிகள் சிறு வணிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் அச்சம் கொண்டுள்ள வணிகர்கள் யுபிஐ பேமெண்ட் வேண்டாம் என மறுக்கிறார்கள்.

ஜிஎஸ்டி நோட்டீஸ்: ஒரு நாளைக்கு நாங்கள் 3000 ரூபாய்க்கு தான் தொழில் செய்கிறோம், அதில் ஒரு சிறிய அளவுதான் எங்களுக்கு லாபமாக கிடைக்கிறது , அதையும் வரி கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பினால் என்ன செய்வது என எக்கனாமிக் டைம்ஸுக்கு ஒரு வணிகர் பேட்டி அளித்துளார். சாலையோர கடைகளை நடத்துபவர்கள், டீக்கடை நடத்துபவர்கள், தள்ளுவண்டி வைத்திருப்பவர்களுக்கு கூட ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறதாம். இதுவே பல்வேறு வணிகர்களும் யுபிஐ பேமென்ட்களுக்கு மாற்றாக மீண்டும் பணத்தை வழங்குமாறு கூறுவதற்கு காரணம் என தெரிய வருகிறது.
சட்டம் என்ன சொல்கிறது?: ஜிஎஸ்டி நோட்டீசை காட்டி மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு தள்ளுவண்டி கடைகளை அகற்றி வருகின்றனர் இதனால் வணிகர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் ஒரு வணிகம் சரக்கு அல்லது பொருட்களை விநியோகம் செய்கிறது அதன் ஆண்டு வருமானம் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் கட்டாயம் ஜிஎஸ்டியில் பதிவு செய்திருக்க வேண்டும் ஜி எஸ் டி வரியை செலுத்தி ஆக வேண்டும் . இதுவே அவர்கள் சேவை சார்ந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்களுடைய ஆண்டு வருமானம் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்போது கட்டாயம் அவர்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்து வரி செலுத்தியாக வேண்டும்.
அதிகாரிகள் விளக்கம்: கர்நாடக வணிக வரித்துறை அதிகாரிகள் யுபிஐ சேவை நிறுவனங்களிடம் வணிகர்களின் யுபிஐ பரிவர்த்தனை விவரங்களை பெற்று அதன் அடிப்படையில் ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என கர்நாடக மாநில வணிகவரித்துறை ஆணையர் விபுல் பன்சால் தெரிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட 14,000 பேரை இவ்வாறு கண்டறிந்து நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக வணிகர்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கும் அவர் தற்போதைக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பு அனுப்பப்பட்டிருக்கிறது இவர்கள் நேரடியாக வந்து தங்களுடைய நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு விளக்கம் தரலாம் என கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கு தான் சிரமம்: இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் அதன் அடிப்படையில் அவர்களுக்கு வரி வருகிறதா இல்லையா என்பது முடிவெடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் வணிகர்கள் தங்களிடம் பதிவு செய்து விளக்கம் தந்து காம்போசிஷன் திட்டத்தின் கீழ் ஒரு சதவீத ஜிஎஸ்டி மட்டும் செலுத்துவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இருந்தாலும் ஜிஎஸ்டி நோட்டீஸால் வணிகர்கள் அச்சமடைந்து யுபிஐ பேமெண்ட் வேண்டாம் என கூறுவது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications