வேலையில்லை, ஆனா சம்பளம் உண்டு.. Salesforce நிறுவனத்தின் பணிநீக்கத்தில் புதுமை.. Garden Leave என்றால் என்ன..?

உலகம் முழுவதும் அனைத்து நிறுவனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏஐ தொழில்நுட்பத்தில் அதிகளவில் நேரத்தையும், பணத்தையும் முதலீடு செய்துள்ள காரணத்தால் பெரியளவிலான ஊழியர்கள் மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கையில் எடுத்து வருகிறது, இதில் தற்போது சேல்ஸ்போர்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டில் பல முறை பணிநீக்கம் செய்திருந்தாலும், இந்த முறை மிகவும் சீரியஸான முறையில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவதாகத் தெரிகிறது.

வேலையில்லை, ஆனா சம்பளம் உண்டு.. Salesforce நிறுவனத்தின் பணிநீக்கத்தில் புதுமை.. Garden Leave என்றால் என்ன..?

இதில் முக்கியமாக மூத்த நிலை ஊழியர்களை இந்தியா மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து பணிநீக்கம் செய்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்யப்பட்ட பணிநீக்கத்தில் சுமார் 1000 பேரையும், ஆகஸ்ட் மாத பணிநீக்கத்தில் கலிப்போர்னியாவில் இருக்கும் சேல்ஸ் அணியில் சுமார் 86 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த நிலையில் தற்போதைய பணிநீக்கம் குறித்து Blind தளத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பல பதவிகளைச் செய்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் பணிநீக்கத்தில் மிகவும் புதுமையாக Garden leave என்ற முறையை அறிமுகம் செய்துள்ளது முக்கியமான விவாத பொருளாக மாறியுள்ளது.

Also Read

Garden Leave என்றால் என்ன..?

சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் இந்தியாவில் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ள சில ஊழியர்களுக்கு Garden Leave மற்றும் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பெரும்பாலான பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 21 வார சம்பளத்தை severance pay ஆகக் கொடுப்பதாகவும், சில ஊழியர்களுக்கு 2 மாதம் வரையிலும் கார்டன் லீவ் வழங்கப்படுவதாகவும், மேலும் ஊழியரின் பணிக்காலம் மற்றும் பணிபுரியும் இடத்தை பொறுத்துக் கூடுதல் இழப்பீடு தொகை வழங்கப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

பொதுவாக பணிநீக்கம் செய்யப்படும் போது severance pay, பணிக்காலம் அடிப்படையில் கூடுதல் இழப்பீடு கொடுப்பது எல்லோரும் கேள்விப்பட்டது தான், ஆனால் கார்டன் லீவ் தான் புதுமையான விஷயமாக உள்ளது.

உதாரணமாக ஒரு ஊழியர்களுக்கு 2 மாதம் கார்டன் லீவ் கொடுக்கப்பட்டால், அந்த ஊழியர் நிறுவனத்திற்கு வர சேவையில்லை, எவ்விதமான பணியும் செய்யத் தேவையில்லை, ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு நிறுவனத்தின் ஊழியராகவே இருப்பார்.

இக்காலகட்டத்திற்குச் சம்பளமும் உண்டு, அதேபோல் பணியை விட்டு வெளியேறும் போது severance pay, இழப்பீடு தொகையும் உண்டு.

சரி எதற்காக இத்தகைய கார்டன் லீவ் ஒரு ஊழியருக்கு அளிக்கப்படுகிறது..?

ஒரு ஊழியர் முக்கியமான திட்டத்தில் பணியாற்றியிருந்தால், அத்திட்டம் குறித்த ரகசியத் தகவல்கள் போட்டி நிறுவனத்திற்கோ அல்லது வேறு நிறுவனத்திற்குச் செல்வதைத் தடுப்பதற்காக இந்த கார்டன் லீவ் கொடுத்து அந்த ஊழியரைச் சம்பளம் கொடுத்து உட்கார வைக்கப்படுகிறது.

இதில் வர்த்தக ரகசியங்கள் மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் தொழில்நுட்பத் தகவல்கள், எதிர்காலத் திட்டங்கள், விலை நிர்ணய உத்திகள் மற்றும் வாடிக்கையாளர் விவரங்களைப் பாதுகாக்கவும் இத்தகைய சிறப்பு விடுமுறை அளிக்கப்படுகிறது.

பொதுவாக இத்தகைய சிறப்பு விடுமுறை உயர் பொறுப்பில் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும், ஆனால் சில சமயம் முக்கிய திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.

கார்டன் லீவ் குறித்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பலர் Blind தளத்தில் தெரிவித்துள்ளனர், அதில் ஒரு பதிவில் ஒரு ஊழியருக்குப் பிப்ரவரி 1, 2027 வரையில் கார்டன் லீவ் அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் கார்டன் லீவ்-ல் இருக்கும் ஊழியர்கள் இக்காலகட்டத்தில் வேறு நிறுவனங்களுக்குச் சேர முடியாது என்பது முக்கியமான நெருக்கடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+