கொல்கத்தா: இந்தியா பொருளாதாரம் படு வீழ்ச்சி கண்டு வரும் இந்த நிலையில், பல பொருளாதார நிபுணர்களும் மூத்த அதிகாரிகளும் இந்தியாவை தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இது இந்தியர்களை பயமுறுத்தும் விதத்தில் இருந்தாலும், ஆனால் உண்மையைத் தானே சொல்கிறார்கள் என்றும் கூற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
அதிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர், பொருளாதாரத்திற்கான பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜி, இந்திய பொருளாதாரம் குறித்து அவ்வப்போது தனது கருத்துகளை கூறி வருவது வழக்கம் தான்.
ஏற்கனவே இந்தியா மிகப்பெரிய ரெசனுக்கு அருகில் இருக்கிறது என்று கூறியவர், இந்தியாவில் ரெசசன் இல்லை என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் நம்மிடம் இல்லை என்றும் தற்போது கூறியுள்ளார்.
ரெசசனுக்கு அருகில் தான் இருக்கிறோம்
தொடர்ந்து இந்திய பொருளாதாரம் குறித்து தனது கருத்துக்களை கூறி வரும் அபிஜித் பேனர்ஜி, நாம் மிக மோசமான பொருளாதார மந்தநிலையில் தான் இருக்கிறோம். அதை இல்லை என்றும் கூறும் அளவிற்கு எந்த பெரிய பொருளாதார தரவுகளும் நம்மிடம் இல்லை. ஆக ரெசசன் கன்பார்ம் தான் என்று பட்டும் படாமல் தனது கருத்தினை கூறியுள்ளார்.
பதில் ஏதும் இல்லை
நீங்கள் என்னிடம் நாம் ரெசசனில் இருக்கிறோமா என்று கேட்டால், என்னிடம் நாம் ரெசசனில் இல்லை என்று கூற எந்த பதிலும் இல்லை. ஏனெனில் அந்தளவுக்கு நாம் மந்த நிலையில் தான் இருக்கிறோம் என்றும் கொல்கத்தாவில் நடந்த டாடா ஸ்டீல் இலக்கியக் கூட்டத்தின் அமர்வின் போது பேனர்ஜி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
பதில் ஏதும் இல்லை
நீங்கள் என்னிடம் நாம் ரெசசனில் இருக்கிறோமா என்று கேட்டால், என்னிடம் நாம் ரெசசனில் இல்லை என்று கூற எந்த பதிலும் இல்லை. ஏனெனில் அந்தளவுக்கு நாம் மந்த நிலையில் தான் இருக்கிறோம் என்றும் கொல்கத்தாவில் நடந்த டாடா ஸ்டீல் இலக்கியக் கூட்டத்தின் அமர்வின் போது பேனர்ஜி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
பெரிய மந்தநிலை
சொல்லப்போனால் முறைசாரா துறையில் எந்த வித புதிய நம்பகமான பதிலும் இல்லை. இது பெரிய மந்த நிலையையே சுட்டிக் காட்டுகிறது. அதிலும் தற்போது வரும் தகவல்கள் அதை உறுதிப்படுத்துகின்றன. சொல்லப்போனால் இரு சக்கர வாகன விற்பனையானது மிக மெதுவாகத் தான் இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் பெரிய மந்த நிலையை காணலாம் என்றும் கூறியுள்ளார்.
அர்விந்த் சுப்பிரமணியன் கருத்து
அபிஜித் இந்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியனின் கருத்தையும் நினைவு கூர்ந்துள்ளார். அர்விந்த் என்ன கூறினார் என்று பாருங்கள், இந்தியா 1991ல் நிலவி வந்த நெருக்கடியுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார். இது தான் மந்த நிலை ஏற்பட்ட ஒரு வருடம், ஆனால் தற்போது ஏற்றுமதி, இறக்குமதி, முதலீடுகள் அனைத்தும் 1991ஐ விட மோசமாக இருப்பதாக அர்விந்தின் கூற்றையும் நினைவு கூர்ந்துள்ளார்.
மந்த நிலையில் தான் இருக்கிறோம்
ஆக அர்விந்தின் கருத்தை பொறுத்த வரையில் நாம் மந்த நிலையில் தான் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து கூறிய பானர்ஜி, உண்மையில் இது குறித்து அறிய வழி இல்லை என்றும் கூறியுள்ளார். முன்னதாக ஒர் அறிக்கையில் மத்திய அரசானது வளர்ச்சியை புதுப்பிக்க தேவையை தூண்ட வேண்டும்.அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications