இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா குழுமத்தின் தலைவராகச் சந்திசேகரன் இருந்தாலும், பல நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் டாடா குடும்பத்தைச் சேர்ந்த பலர் இருக்கின்றனர். அப்படி ரத்தன் டாடா-வை தொடர்ந்து டாடா குழுமத்தில் இருக்கும் டாடா குடும்ப உறுப்பினர்களில் முக்கியமானவர் நோயல் டாடா.
இவர் பல நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் நிலையில் தற்போது நேரடி நிர்வாகப் பதவிகளை விடுத்து, நிர்வாகக் குழுவின் உறுப்பினராக மட்டுமே உள்ளார்.
நோயல் டாடாவின் இந்தத் திடீர் முடிவுக்கு என்ன காரணம்..?
நோயல் டாடா
நோயல் டாடா தனது நேரடி நிர்வாகப் பதவிகளில் இருந்து வெளியேறி, டாடா இண்டர்நேஷன்ல் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த முடிவை எடுக்க மிக முக்கியக் காரணம் அவருடைய வயது தான். ஆம் டாடா குழுமத்தில் ஓய்வு கொள்கையின் படி நோயல் டாடா தனது பதவிகளை விடுத்துள்ளார்.
வயது வரம்பு
டாடா குழுமத்தின் விதிமுறைப்படி 65-க்கு மேல் நிர்வாகத் தலைவர் பதவியில் இருக்கக் கூடாது, 70 வயதுக்கு மேல் அனைத்து நிர்வாகக் குழு பதவிகளில் இகுக்கக் கூடாத, குறித்த வயது வரம்புக்கு மேல் தத்தம் பதவிகளில் இருந்து வெளியேற வேண்டும். இதன் படி நோயல் டாடா-வுக்கு 65 வயதான நிலையில் அனைத்து நேரடி நிர்வாகப் பொறுப்பில் இருந்து வெளியேறியுள்ளார்.
முக்கியப் பணி
தற்போது நோயல் டாடா டிரென்ட், டாடா இன்வெஸ்ட்மென்ட், வோல்டாஸ், டாடா இண்டர்நேஷன்ல் ஆகிய நிறுவனங்களின் non-executive சேர்மன் ஆகவும், டைட்டன் நிறுவனத்தின் துணை தலைவராகவும் உள்ளார்.
டிரென்ட் நிறுவனம்
டாடா குழுமத்தின் ரீடைல் வர்த்தகப் பிரிவு நோயல் டாடா தலைமையில் இயங்கி வந்தது, டிரென்ட் நிறுவனத்தின் கீழ் தான் வெஸ்ட்சைட், Zudio, ஸ்டார் பஜார் பிரான்சைஸ் ஆகியவை உள்ளது. இதை அனைத்துமே நோயல் டாடா தலைமையிலான ஆரம்பத்தில் இருந்து உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாடா டிரஸ்ட்
நேரடி நிர்வாகப் பதவிகளில் இருந்து நோயல் டாடா வெளியேறியுள்ள நிலையில், இனி வரும் காலத்தில் டாடா டிரஸ்ட் நிறுவனத்தின் டிரஸ்டி-யாக மிகவும் முக்கியப் பணிகளைச் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. நோயல் டாடா 1999 முதல் டிரென்ட் வர்த்தகப் பிரிவைத் தலைமையேற்று நிர்வாகம் செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications