அதுக்குன்னு இப்படியா ஏமாறுவாங்க? ரூ.1000 அமேசான் வவுச்சருக்கு ஆசைப்பட்டு ரூ.51 லட்சத்தை இழந்த பெண்!

மற்றொரு ஆன்லைன் மோசடி சம்பவத்தில் சிக்கி நொய்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 51 லட்சத்தை இழந்துள்ளார். வாட்ஸ்அப் குரூப்பில் பகிரப்பட்ட அமேசான் கிப்ட் வவுச்சரைப் பயன்படுத்த முயன்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண், ஆள் பேர் தெரியாத நபரின் மூலம் ஒரு குரூப்பில் சேர்க்கப்பட்டு, அதன் பிறகு இந்த மோசடி சம்பவத்தில் ஆட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்பது குறித்து பார்ப்போம்.

இது போன்ற மோசடி சம்பவங்களில் சிக்காமல் இருக்க மோசடிக்காரர்களின் யுக்தி என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். PTI செய்தி அறிக்கையின்படி பாதிக்கப்பட்ட மீனு ராணி என்ற பெண்ணிற்கு ஹரி சிங் என்ற நபர் மூலம் அழைப்பு வந்துள்ளது. மீனுவிடம் அந்த நபர் பங்குச்சந்தை முதலீடுகளில் தனக்கு 15 வருட அனுபவம் உள்ளதாகவும், தான் ஒரு முதலீட்டு வழிகாட்டி என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அதுக்குன்னு இப்படியா ஏமாறுவாங்க? ரூ.1000 அமேசான் வவுச்சருக்கு ஆசைப்பட்டு ரூ.51 லட்சத்தை இழந்த பெண்!

பின்னர் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இருவரும் பேசத் தொடங்கியுள்ளனர். அப்போது தான் மீனு ராணியை அந்த நபர் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணையும்படி கூறியுள்ளார். முதலீடு பற்றி தெரிந்து கொள்ளவும், லாபம் பார்க்கவும் ஒரு நல்ல வாய்ப்பாக நம்பி, மீனு அந்த வாட்ஸ்அப் குரூப்பில் சேர்ந்தார். அந்த குரூப்பில் ஏற்கனவே இருந்த உறுப்பினர்கள் தங்களுக்கு லாபம் கிடைத்ததாக சில கதைகளையும் பகிர்ந்துள்ளனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, குழுவின் மற்றொரு உறுப்பினரான ஆர்த்தி சிங் பாதிக்கப்பட்ட மீனுவைத் தொடர்பு கொண்டார். ஹரி சிங், குழுவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.1,000 மதிப்புள்ள அமேசான் பரிசு வவுச்சர்களை வாங்கியதாக ஆர்த்தி அவரிடம் கூறினார்.

வவுச்சரைப் பெற, மீனுவிடம் அமேசான் கணக்கில் உள்நுழையும்படி ஆர்த்தி கூறியுள்ளார். வழிமுறைகளைப் பின்பற்றி, அவர் தனது அமேசான் கணக்கில் உள்நுழைந்தார். உடனடியாக ரூ.1,000 அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால் மீனுவிற்கு ஹரி சிங் மீது நம்பிக்கை அதிகரித்தது.

மீனுவின் நம்பிக்கையை பெற்ற பிறகு ஹரி சிங் தனது வழிகாட்டுதலின் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்படி கூறியுள்ளார். அப்படி செய்தால் முதலீட்டை விட 3 முதல் 5 மடங்கு சம்பாதிக்க முடியும் என்றும் பாதிக்கப்பட்டவரை நம்ப வைத்தார். அதற்காக ஆரம்பத்தில் ரூ. 50,000 டெபாசிட் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். உடனே மீனுவும் தனக்கு லாபம் வரும் என்று எண்ணி 50,000 ரூபாயை மாற்றியுள்ளார். அப்போது ஒரு மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யும்படி மீனுவிடம் ஹரி சிங் கூறியுள்ளார்.

அதில் மீனுவிற்கு அதிக லாபம் ஈட்டப்பட்டது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி தான் நல்ல வருமானம் பெற்றதாக நினைத்துக் கொண்டு அதிக பணத்தை முதலீடு செய்ய தொடங்கினார். தனது கணவர், மாமியார் மற்றும் பிற உறவினர்களிடமிருந்து மொத்தமாக ரூ.51.50 லட்சத்தை கடனாக பெற்று மோசடி செய்பவருக்கு மாற்றியுள்ளார். அதன் பிறகு மீண்டும் கடன் பெறுவதற்காக ஒருவரை அனுகிய போது தான் இது மோசடியாக இருக்கலாம் என்று மீனுவிற்கு தெரிய வந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மீனு ராணி வாட்ஸ்அப் குரூப்பில் தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது மோசடி செய்பவர்கள் உடனடியாக குரூப்பில் இருந்து வெளியேறியுள்ளனர். பின்னர் அவர் கிரேட்டர் நோய்டாவில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எந்த ஒரு முதலீடும் 5 மடங்கு முதல் 6 மடங்கு வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தெரியாத நபர்களால் ஏதேனும் வாட்ஸ்அப் குரூப்பில் சேர்க்கப்பட்டால் உடனடியாக குரூப்பில் இருந்து வெளியேறுங்கள். எந்த ஒரு சாட்டிலும் ஈடுபட வேண்டாம். மிக முக்கியமாக எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்யாமல் இருங்கள். விழிப்புணர்வுடன் செயல்பட்டால் இது போன்ற மோசடிகளை தவிர்க்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+