பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் பிரச்சனைகளுக்கும் மத்தியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில், பாஜக அல்லாத எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் பரிந்துரையை எதிர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை குறித்தான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.இந்தியாவில் 21 மாநிலங்களில் பாஜக மற்றும் பாஜக-வின் ஆதரவு கட்சிகள் ஆட்சி புரிகின்றன.

இந்த நிலையில் கொரோனா காலத்தில் மா நிலங்களுகு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை அரசால் சரிவர வழங்க முடியவில்லை. செப்டம்பர் பாதி வரையிலாக காலத்தில் மட்டும் இந்த தொகை 97,000 கோடி ரூபாயாகவும் இருந்தது.
மத்திய அரசு பரிந்துரைத்த கடன் திரட்டும் முடிவை பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களான மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, தெலுங்கானா, டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட மா நிலங்கள் எதிர்க்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த மாநிலங்கள் கடன் பரிந்துரை வேண்டாம். மாற்று வழியை பரிந்துரைக்குமாறும் மத்திய அரசினை வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் மா நில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பானது 2.35 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு வழங்க வேண்டிய தொகை மட்டும், 97,000 கோடி ரூபாயாகும். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த கொரோனா காலத்தில் வர வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் 1.38 லட்சம் கோடி ரூபாயாகும்.
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையினை இரண்டு விதமாக பரிந்துரை செய்திருந்தது. ஒன்று இழப்பீட்டு தொகையினை ரிசர்வ் வங்கியிடம் கடனாக பெறுவது. இரண்டாவது வெளி சந்தையில் மாநில அரசுகள் திரட்டிக் கொள்ளலாம் என்பது தான். ஆனால் இதற்கு தமிழ் நாடு, மேற்கு வங்கம், கேரளா, டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநில அரசுகள் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தன.
ஜிஎடி பட்டியலில் 5,12,18 மற்றும் 28% என்ற விகிதங்கள் அடிப்படையில் வரி விகிதங்கள் உள்ளன. இதில் மதுபானம், சிகரெட், ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட பலவற்றிற்கும் அதிகளவிலான வரி விகிதங்கள் விதிகப்படுகின்றன.


Click it and Unblock the Notifications