இந்தியாவே அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்குவதிலும், தங்கத்தில் முதலீடு செய்வதிலும் ஆர்வமாக இருக்கும் வேளையில், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரு சூப்பரான டேட்டா வெளியாகியுள்ளது. இனி தங்கம் மட்டுமல்ல தங்க நகை கடையும் லாபத்தை அள்ளி தரப்போகிறது.
அட்சய திருதியை-ல் தங்கம் வாங்கும் நடைமுறை கடந்த 20 வருடமாக நாட்டின் பெரும்பாலான மக்கள் பின்பற்றி வரும் வேளையில் ஒவ்வொரு ஆண்டும் தங்க நகைக்கடைகள் இத்தகைய பணிக்குப் பெரிய அளவிலான ஏற்பாடுகளைச் செய்கிறது. இதற்கு ஏற்றார் போல் தங்கம் விலை தடாலடியாக உயர்கிறது.

இதனால் தங்க நகை கடைகளும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. கடந்த அட்சய திருதியை தினத்தில் இருந்து தங்கம் மீதான முதலீட்டுக்கு 16% வருமானத்தை வழங்கியிருந்தாலும், இந்தியப் பங்குச் சந்தையில் நகைக்கடை பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்குப் பல மடங்கு லாபத்தைக் கொடுத்துள்ளது.
இதேவேளையில் தங்கம் மீதான முதலீட்டுக்கு வெறும் 16 சதவீத லாபத்தை அளித்த நிலையில் BSE சென்செக்ஸ் கடந்த ஒரு வருடத்தில் 21% லாபத்தை முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளது. இதனால் தங்கம் வரலாற்று உச்சம் அடைந்தாலும் முதலீட்டாளர்களுக்குப் பங்குச்சந்தையும், நகைக்கடைகள் பங்குகள் மீதான முதலீடுகள் அதிகப்படியான லாபத்தைக் கொடுத்துள்ளது.
இந்திய பங்குச் சந்தையில் ஜொலிக்கும் நகைக்கடை நிறுவனங்கள் பட்டியலை நீங்களே பாருங்க. இங்கு பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனப் பங்குகள் அனைத்தும் கடந்த அட்சய திருதியை பண்டிகைக்கும், இன்று கொண்டாடப்படும் அட்சய திருதியை பண்டிகை காலகட்டத்தில் கிடைத்த லாப அளவீடுகளாகும்.
ஸ்கை கோல்ட் பங்குகள் 302% உயர்வு,கல்யாண் ஜுவல்லர்ஸ் இந்தியா பங்குகள் 281% உயர்வு, தங்கமயில் ஜுவல்லரி பங்குகள் 135% உயர்வு, பி.சி. ஜுவல்லர் பங்குகள் 100% உயர்வு. இதேபோல் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி 59,655 ஆக இருந்த சென்செக்ஸ், மே 9, 2024 நிலவரப்படி 72,404 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த அட்சய திருதியை நாளில் இருந்து 12,750 புள்ளிகள் உயர்வாகும்.
இதேபோல் இந்திய பங்குச்சந்தையில் அசத்திய முக்கியமான நகைக்கடைகளின் பங்குகளின் பர்பாமென்ஸ்:
ராதிகா ஜுவல்டெக் பங்குகள் 79.99% லாபம்,
ஆஷ்பூரி கோல்ட் ஆர்னமெண்ட் பங்குகள் 76.25% லாபம்,
திரிபவ்பதாஸ் பீம்ஜி ஜவேரி பங்குகள் 53.75% லாபம்,
உதய் ஜுவல்லரி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 61% லாபம்,
கோல்கொண்டா டைமண்ட்ஸ் & ஜுவல்லரி பங்குகள் 50.40% லாபம்,
டைட்டன் கம்பெனி பங்குகள் 19.97% லாபம்,
ஆசியன் ஸ்டார் கம்பெனி பங்குகள் 20.29% லாபம்,
கோல்டியம் இன்டர்நேஷனல் பங்குகள் 11.18% லாபம்,
Renaissance குளோபல் பங்குகள் 15.55% லாபம்,
ஸ்டார்லைன்ஸ் என்டர்பிரைசஸ் பங்குகள் 3.44% லாபம்,
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குகள் -50.72% இழப்பு.
செங்கோ கோல்ட் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை 14, 2023 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இது இதுவரை 117% லாபம் ஈட்டியுள்ளது. மேலும், ரூ.2,526.82 மதிப்பிலான சந்தை மூலதனம் கொண்ட டி.பி. ஆபூஷன் என்ற ஸ்மால் கேப் நிறுவனம் 250% க்கும் மேற்பட்ட லாபத்தை இந்த காலகட்டத்தில் முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 900 ரூபாய் உயர்ந்து 67,050 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 990 ரூபாய் உயர்ந்து 73,150 ரூபாயாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை ஒவ்வொரு நகரங்களிலும் மாறுபடும், இதேபோல் நீங்கள் வாங்கும் நகைக்கு ஏற்றார் போல் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவை கூடுதலாக சேர்க்கப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 720 ரூபாய் உயர்ந்து 53,640 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 1300 ரூபாய் உயர்ந்து 90000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 140 ரூபாய் உயர்ந்து 26400 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி



Click it and Unblock the Notifications