நவம்பர் 20 பங்குசந்தை விடுமுறை.. உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி.. FII முதலீட்டாளர் நிலை என்ன?

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் காரணமாக, தேசிய பங்குச் சந்தையும் மற்றும் மும்பை பங்குச் சந்தையும் நவம்பர் 20 அன்று மூடப்படும். அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும், அதாவது பங்குகள், பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ், மற்றும் பத்திரங்கள் கடன் ஆகியவையும் நாளை நிறுத்தப்படும்.

நவம்பர் 20 அன்று மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 288 தொகுதிகளிலும் வாக்கு பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 அன்று நடைபெற உள்ளது. மகாராஷ்டிர மாநில தேர்தல் மத்தியில் ஆளும் பிஜேபி அரசுக்கு மிகவும் முக்கியமானது என்பதால் நாட்டு மக்கள் அனைவரின் கவனமும் நாளை மாலை வெளியாகும் எக்சிட் போல் மற்றும் நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையிலும் இருக்கும்.

நவம்பர் 20 பங்குசந்தை விடுமுறை.. உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி.. FII முதலீட்டாளர் நிலை என்ன?

இந்த நிலையில் இன்றைய வர்த்தக இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு சிறப்பான நாளாக அமைந்தது என்றால் மிகையில்லை. கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை கண்ட பின்னர், நவம்பர் 19ஆம தேதி செவ்வாய்க்கிழமை அன்று அனைத்து முதலீட்டாளர்களும் எதிர்பார்த்தாக ஒரு ஜப் கிடைத்துள்ளது.

சென்செக்ஸ் 239.37 புள்ளிகள் உயர்ந்து 77,578.38-ல் நிறைவுற்றது, அதே நேரத்தில் நிஃப்டி 64.70 புள்ளிகள் உயர்ந்து 23,518.50-ல் முடிந்தது. தொடர் சரிவின் காரணமாக முதலீட்டாளர்கள் குறைந்த விலையில் பங்குகளை வாங்க முடிவு செய்து களத்தில் குதித்த காரணத்தால் உயர்வுடன் முடிந்தது. கடந்த 2 மாத காலத்தில் சுமார் 50 லட்சம் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்தது மும்பை பங்குச்சந்தை.

HDFC வங்கி, டெக் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்கு விலை உயர்வு காரணமாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்தது. ஆனாலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பிற முக்கியமான பங்கு விலை சரிவு காரணமாக சந்தையின் உயர்வு கணற்றில் கல்லை கட்டிப்போட்டது போல் இருந்தது.

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) திங்கட்கிழமை வர்த்தகத்தில் ரூ.1,403.40 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றனர். அதே நேரத்தில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DIIs) ரூ.2,330.56 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி இந்திய பங்குச்சந்தைக்கு வலு சேர்த்து வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+