மத்திய அரசு ஒவ்வொரு மாத முடிவிலும் ஜிடிஎஸ் வரி வசூல் அளவீட்டை வெளியிட்டு வருவதோடு, நாட்டின் வர்த்தக வளர்ச்சியை இதன் மூலம் மக்களுக்கு பறைசாற்றி வருகிறது மோடி அரசு. அந்த வகையில் நவம்பர் மாத முடிவில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் கடந்த வருடத்தின் நவம்பர் மாதத்தை காட்டிலும் 15 சதவீதம் அதிகரித்து 1,67,929 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டிசம்பர் 1 ஆம் தேதி மாலை மத்திய நிதி அமைச்சகம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் நவம்பர் 2023-க்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,67,929 கோடியாகவும், இது கடந்த வருடத்தை காட்டிலும் 15 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

2023 நவம்பரில் மொத்த ஜிஎஸ்டி வரி வசூலான 1,67,929 கோடி ரூபாயில், சிஜிஎஸ்டி ரூ.30,420 கோடியும், எஸ்ஜிஎஸ்டி ரூ.38,226 கோடியும், ஐஜிஎஸ்டி ரூ.87,009 கோடியும் அடங்கும். இதில் முக்கியமாக ஐஜிஎஸ்டி-யில் பொருட்களின் இறக்குமதியில் வசூலான ரூ.39,198 கோடியும் வரியும் அடக்கம்.
மேலும் மத்திய அரசு வசூலிக்கும் செஸ் வரி பிரிவில் ரூ.12,274 கோடி திரட்டப்பட்டு உள்ளது. இதில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் இறக்குமதி வரியில் ஒரு பகுதியான செஸ் வரி ரூ.1,036 கோடியும் அடங்கும்.
2023 நவம்பர் மாதம் உள்நாட்டு வர்த்தகத்தின் மூலம் அதிக வரி வருவாய் பெற்றுள்ளது, குறிப்பாக கடந்த வருட அளவை காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். இதற்கு முக்கியமான காரணம் நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட்டது தான். மேலும் 2023-24 ஆம் நிதியாண்டில் மட்டும் தொடர்ந்து 6 வது முறையாக ஜிஎஸ்டி வரி வசூல் 1.60 லட்சம் ரூபாய் அளவீட்டை தாண்டுகிறது.
அக்டோபரில் ஜிஎஸ்டி வருவாய் 13 சதவீத வளர்ச்சி அடைந்து ரூ.1,72,003 கோடியாக இருந்தது. ஏப்ரல் 2023 இல் வரலாற்று உயர்வான ரூ.1,87,035 கோடியாக பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2023 நவம்பர் தான் இதுவரையில் பதிவான அதிகப்படியான வளர்ச்சி அளவீடாகும் (15%).
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications