நவம்பர் மாதம் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூல் அளவு 1,31,526 கோடி ரூபாயாக உயர்ந்து அக்டோபர் மாத உச்சத்தைக் கடந்து 2வது பெரிய வசூல் அளவீட்டைப் பதிவு செய்துள்ளது. அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் அளவீடு 1.30 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி வரிப் பரிவு
இந்நிலையில் நவம்பர் மாதம் CGST பிரிவில் 23,978 கோடி ரூபாயாகவும், SGST பிரிவில் 31,127 கோடி ரூபாயாகவும், IGST பிரிவில் 66,815 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. மேலும் செஸ் பிரிவில் 9,606 கோடி ரூபாய் அளவிலான வரி வருமானத்தையும் பெற்றுள்ளது மத்திய அரசு.
ஜிஎஸ்டி வரி வசூல்
அக்டோபர் மாதத்தைத் தொடர்ந்து நவம்பர் மாதமும் ஜிஎஸ்டி வரி வசூல் அளவு 1.30 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் தற்போது 25 சதவீதம் அதிக ஜிஎஸ்டி வரி வசூலைப் பெற்றுள்ளது மத்திய அரசு. 2019-20ஆம் நிதியாண்டின் நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகமாகும்.
ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு
ஜிஎஸ்டி வரி பலகையை மறுசீரமைப்புச் செய்ய இது சரியான தருணம் என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கேவி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு நாணய கொள்கை இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
NIPFP அமைப்பு
சமீபத்தில் NIPFP அமைப்பு சமர்ப்பித்துள்ள திட்டத்தின் படி ஜீரோ சதவீத வரி அளவீடு கணக்கில் சேர்க்காமல் மீதமுள்ள 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய 4 வரி பலகையை 8%, 15% மற்றும் 30% வரிப் பலகையாகப் பிரிக்கலாம் என்ற மாதிரி திட்டத்தை முன்வைத்துள்ளது. 8%, 15% மற்றும் 30% வரிப் பலகையாகப் பிரிக்கப்படுவதன் மூலம் மத்திய அரசு எவ்விதமான வரி வருமான அளவீடும் பாதிக்காது எனக் குறிப்பிட்டு உள்ளது.
நவம்பர் மாதம்
நவம்பர் மாதம் ஆட்டோமொபைல் துறை வர்த்தகம் பெரிய அளவில் குறைந்துள்ளது, ஆனால் இதேவேளையில் பண்டிகை கால விற்பனை சிறப்பாக இருந்த காரணத்தால் ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த மாத அளவை தாண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications