சென்னை, பெங்களூர் , டெல்லி போன்ற நகரங்களில் எல்லாம் ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து தான் வருகிறது. பலருக்கும் தாங்கள் இருந்த இடத்திலேயே பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து உண்பதற்கான வாய்ப்புகளை இந்த செயலிகள் ஏற்படுத்தி தந்திருக்கின்றன .
உணவு டெலிவரி தளங்கள் உணவு டெலிவரிக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றன, கூடுதலாக மறைமுக கட்டணங்களை விதிக்கின்றன என பல்வேறு புகார்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவதை நாம் காணலாம். அப்படி அண்மையில் எக்ஸ் தளத்தில் வெளியான ஒரு பதிவு பெரிய விவாதமாக உருவெடுத்திருக்கிறது.

ஆஷிஷ் குப்தா என்பவர் வெளியிட்டிருக்கும் ஒரு பதிவில் அரசு இப்போதுதான் வரலாற்று சிறப்புமிக்க ஜிஎஸ்டி வரி திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது. தற்போது மழை கூட அதாவது இந்திர பகவான் கூட இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் வந்து விட்டார் மழை பெய்யும் போது உங்களுக்கு ஸ்விக்கியில் 25 ரூபாய் மழைக்கான கட்டணமாக விதிக்கிறார்கள். அந்த மழைக்கான கட்டணத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி என 4.50 ரூபாய் காசுகளை வசூல் செய்கிறார்கள் என கூறியுள்ளார்.
கூடிய விரைவில் சூரிய பகவானுக்கான கட்டணம், ஆக்ஸிஜன் கட்டணம், சுவாசிப்பதற்கான கட்டணம் உள்ளிட்டவற்றை கூட இவர்கள் வசூல் செய்வார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார். அவர் அத்துடன் தனக்கு ஸ்விக்கியில் தனக்கு வந்த ரசீதையும் புகைப்படம் எடுத்து பதிவு செய்திருக்கிறார். அதில் உணவு பேக்கேஜிங் கட்டணமாக 20 ரூபாய் பிளாட்பார்ம் கட்டணமாக 14.99 ரூபாய் மழைக்கான கட்டணமாக 25 ரூபாய் , உணவகத்திற்கான ஜிஎஸ்டி 14 ரூபாய், மழைக்கான கட்டணத்திற்கான ஜிஎஸ்டி 4.50 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் லட்சக்கணக்கானவர்களின் பார்வையையும் ஆயிரக்கணக்கானவர்களின் கமெண்ட்களையும் பெற்றிருக்கிறது . ஒரு பயனர் அடுத்ததாக உங்களுக்கு காலிங் பெல் அழுத்துவதற்கு ஒரு கட்டணம் ,மோசமான சாலையை கடந்து வருவதற்காக ஒரு கட்டணம், போக்குவரத்து நெரிசலில் காத்திருந்ததற்காக ஒரு கட்டணம் என படிப்படியாக கட்டணங்களை அதிகரிக்க போகிறார்கள் என கூறியிருக்கிறார்.
ஒரு நபர் சிரித்துக் கொண்டே உணவு டெலிவரி செய்வதற்கு ஒரு கட்டணம் என்று கூட கேட்பதற்கு வாய்ப்புள்ளது என கூறியிருக்கிறார். ஒரு நபர் இத்தகைய ஜிஎஸ்டி வரிகளால் அரசு கஜானா நிரம்பி வழிகிறது சாமானிய மக்களோ கையில் பணமில்லாமல் இருக்கிறார்கள் எனக் கூறியிருக்கிறார். ஒரு நபர் மழைக்கான கட்டணத்திற்கு கூட ஜிஎஸ்டியா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஒரு பயனர் எதற்கு இப்படி ஆன்லைன் ஆர்டர் செய்துவிட்டு இந்த கட்டணம் அந்தக் கட்டணம் என புலம்பி கொண்டிருக்கிறீர்கள், வண்டி எடுத்து சென்று நீங்களே கடையில் வாங்கி உண்ணுங்கள் இல்லையென்றால் அந்த கடைக்கு போன் செய்தால் அவர்களை கூட ஸ்விக்கி வெளியிட்ட தளங்களிடம் கமிஷன் பெறுவதற்கு பதிலாக உங்களுக்கு இலவசமாகவே டெலிவரி செய்வார்கள் என கூறியிருக்கிறார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications