ஃபுளோரிடா: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தப்படுவது மகிழ்ச்சி தான் என்றாலும் தற்போது மோசடியாளர்களும் அதனை சாதகமாக பயன்படுத்துகின்றனர் என்பது தான் சோகம்..
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஒருவரின் குரலை உருவாக்கி அவரது பெற்றோரிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் பணத்தை பறிக்க முயன்ற மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் வசிப்பவர் தான் ஜே சூஸ்டர். இவர் ஜனநாயக கட்சியில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் அண்மையில் தன்னுடைய குடும்பம் செயற்கை நுண்ணறிவால் வாய்ஸ் குளோனிங் செய்யப்பட்ட தன்னுடைய குரலை கொண்டு ஏமாற்றப்பட இருந்தது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜே சூஸ்டரின் தந்தைக்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. ஜே சூஸ்டரின் குரலில் எதிரில் இருந்தவர் பேசியுள்ளார். ஒரு கார் விபத்தில் சிக்கி கொண்டு காயமடைந்து விட்டதாகவும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய தாலே இத்தகைய விபத்து நேர்ந்ததாகவும் காவல்துறையினர் தன்னிடம் 25 லட்சம் ரூபாய் பணம் தந்தால் எந்த வழக்குமில்லாமல் விடுவித்து விடுவதாக கூறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் சூஸ்டருக்கு அப்படி எதுவுமே நடக்கவில்லை.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது குரலை குளோனிங் செய்து இப்படி ஒரு மோசடி முயற்சி நடந்துள்ளது. சூஸ்டரின் தந்தை நிஜமாகவே சூஸ்டர் தான் பேசுகிறார் என நம்பும் அளவுக்கு அந்த குரல் தத்ரூபமாக இருந்துள்ளது. கிட்டத்தட்ட அவரும் அவரது குடும்பத்தினரும் உண்மையாகவே சிஸ்டர் பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ளார் என நம்பி விட்டார்களாம். இருந்தாலும் சூஸ்டரின் தந்தை சந்தேகமடைந்து ஒரு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது தான் இவை அனைத்தும் மோசடி என தெரிய வந்ததாம். சூஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதிலிருந்து அவரது குரலை மாதிரியாக எடுத்து ஏஐ குளோனிங் செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
தன்னுடைய குடும்பத்தினரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் மோசடியாளர்கள் இப்படி ஒன்றை உருவாக்கி இருப்பதாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்திருக்கும் ஜே சூஸ்டர், பொதுமக்கள் இது போன்ற மோசடிகளில் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகள் அதிகரித்து விட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக வாய்ஸ் குளோனிங் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் நம்மை எளிதில் ஏமாற்றி விடும் என்றும் மோசடிக்காரர்கள் அவற்றைக் கொண்டு எளிதாக நம்மிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து விட முடியும் என்றும் எச்சரித்துள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications