இந்தியாவில் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறிய கிராமங்களில் தொடங்கி பெரிய நகரங்கள் வரை பெரும்பாலான இடங்களில் யுபிஐ மூலம் தான் பலரும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்கிறார்கள் . ஆனால் இந்த யுபிஐ முறையில் பல்வேறு மோசடிகளும் நடைபெற்ற வருகின்றன.
யுபிஐ மோசடிகளை தடுப்பதற்காக இந்தியாவில் யுபிஐ அமைப்பை மேலாண்மை செய்து வரக்கூடிய நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் யுபிஐயில் நடைபெறும் ஒரு மிகப்பெரிய மோசடியை தடுப்பதற்காக அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து யுபிஐ சேவையிலேயே பெரிய மாற்றத்தை கொண்டுவர முடிவு செய்திருக்கிறது .

எனவே அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் நாம் பயன்படுத்தக்கூடிய யுபிஐ செயலிகளில் ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு பேமென்ட் கலெக்ட் ரிக்வெஸ்ட்(UPI collect request ) கொடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நாம் ஒரு நபரிடம் இருந்து பணம் பெற வேண்டும் என்றால் நம்முடைய யுபிஐ செயலியில் சென்று அந்த நபரின் எண்ணை அல்லது யுபிஐ ஐடி உள்ளீடு செய்து எவ்வளவு தொகை வேண்டும் என்பதை ரெக்வஸ்ட் ஆக கொடுக்கலாம். அவர்கள் அதனை கிளிக் செய்து பின் நம்பரை உள்ளீடு செய்தால் அந்த பணம் நம்முடைய கணக்குக்கு வந்துவிடும்.
அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து இதுபோன்ற UPI collect request என்ற வசதி யுபிஐ செயலியில் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பல்வேறு நிதி சார்ந்த மோசடியாளர்களும் இந்த நடைமுறையை பயன்படுத்தி அப்பாவி மக்களின் கணக்கிலிருந்து பணத்தை பெறுகின்றனர். எனவேதான் என்பிசிஐ அனைத்து வங்கிகளுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

அக்டோபர் மாதம் தேதியில் இருந்து ஒரு நபர் மற்றொரு நபருக்கு பணம் பெறுவதற்கான UPI collect request அனுப்ப முடியாது. அதே வேளையில் வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் ஈ காமர்ஸ் செயலிகள் தொடர்ச்சியாக UPI collect request அனுப்ப முடியும் . உதாரணமாக நாம் அமேசான் , ஸ்விக்கி அல்லது ஐஆர்சிடிசி செயலிகளில் ஏதேனும் ஒரு பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போது நாம் பணம் செலுத்த வேண்டிய நேரத்தில் நம்முடைய யுபிஐ செயலிக்கு UPI collect request அனுப்பும்.
நாம் அதனை அப்ரூவ் செய்து யுபிஐ பின் நம்பரை உள்ளீடு செய்தால் பணம் அவர்களுக்கு போகும். வணிக நிறுவனங்கள் மற்றும் செயலிகள் நமக்கு பணம் ரெக்வஸ்ட் அனுப்ப முடியும் ஆனால் ஒரு தனிப்பட்ட நபர் மற்றொரு தனிப்பட்ட நபருக்கு அனுப்ப முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications