பூனம் குப்தா: ரூ.1 லட்சத்தில் துவங்கிய சிம்பிள் பிஸ்னஸ் இன்று ரூ.800 கோடி.. அடேங்கப்பா..!!

படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் வேறு துறையில் நமது முயற்சியையும், உழைப்பையும் முதலீடாக போட்டால் யாரும் சாதிக்கலாம் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் பூனம் குப்தா. வெளிநாடு வாழ் இந்திய பெண் தொழிலதிபரான பூனம் குப்தா ஸ்காட்லாந்தில் ரூ.1 லட்சத்தில் தொடங்கிய காகித மறுசுழற்சி செய்யும் தொழிலை, இன்று ரூ.800 கோடி நிறுவனமாக உயர்த்தியுள்ளார்.

பூனம் குப்தா டெல்லியில் பிறந்தவர். இவர் டெல்லியில் உள்ள லேடி இர்வின் பள்ளி மற்றும் டெல்லி பப்ளிக் பள்ளி ஆகிய பள்ளிகளில் தனது ஆரம்ப பள்ளி படிப்பை முடித்தார். பின்பு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். இருப்பினும் படிப்பின் மீதான தீராத காதலால் டெல்லியில் உள்ள FORE ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் மற்றும் ஹாலந்தில் உள்ள மாஸ்ட்ரிக்ட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் ஆகியவற்றில் சர்வதேச வணிகம் மற்றும் சந்தைப்படுத்தலில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.

பூனம் குப்தா: ரூ.1 லட்சத்தில் துவங்கிய சிம்பிள் பிஸ்னஸ் இன்று ரூ.800 கோடி.. அடேங்கப்பா..!!

2002ல் புனித் குப்தாவை, பூனம் குப்தா திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தகையோடு பூனம் குப்தா ஸ்காட்லாந்திற்கு குடிபெயர்ந்தார். பின்னர் அங்கு எப்படியாவது ஒரு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று தீவிரமாக வேலையை தேடினார். ஆனால் பலன் என்னவோ பூஜ்யம்தான்.

வேலை கிடைக்கவில்லை என்று வருத்தம் இருந்தாலும் பூனம் குப்தா மனம் தளர்ந்து விடவில்லை. நமக்கு யாரும் வேலை கொடுக்காவிட்டால் என்ன நாம் பலருக்கு வேலை கொடுப்போம் என்று சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தார்.

2003ல் ஸ்காட்லாந்து அரசாங்கத்தின் திட்டத்தில் இருந்து ரூ.1 லட்சம் நிதியை பெற்ற பின்னர், கில்மாகோமில் உள்ள தனது வீட்டில் இருந்து தனது முதல் வணிகமான பிஜி பேப்பர் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் இவரது வர்த்தகம் குப்பை களத்துக்காக ஒதுக்கப்பட்ட பொருட்களை ஆய்வு செய்து பொருட்களை மீண்டும் பயன்படுத்துதலில் நிபுணத்துவம் பெற்றது.

இன்று பி.ஜி. பேப்பர் உலகெங்கும் உள்ள 53 நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்கிறது. மேலும் இங்கிலாந்தில வேகமாக வளர்ந்து வரும் பேப்பர் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. தொழிலதிபர் பூனம் குப்தா தனது தொழில் குறித்து கூறுகையில், 2003ல் எனது நிறுவனத்தை தொடங்கினேன். இன்றுடன் கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் ஆகிவிட்டது. பல மாத ஆராய்ச்சிக்கு பிறகு பழைய காகிதத்தை மறுசுழற்சி செய்யும் யோசனையை கண்டுபிடித்தேன்.

எனது பி.ஜி. பேப்பர் நிறுவனம் ஆரம்பத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களிடம் இருந்து பழைய காகிதங்களை வாங்கி வந்தது. இப்போது உலகின் பல நாடுகளில் இருந்து ஸ்கிராப் எடுக்கிறோம. நல்ல தரமான பேப்பரையும் தயாரித்து மற்ற நாடுகளுக்கும் அனுப்புகிறோம் என்று தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+