ஓபராய் குழுமத்தின் எமரிட்டஸ் தலைவர் பிரித்வி ராஜ் சிங் ஓபராய் செவ்வாய்க்கிழமை காலை தனது 94 வயதில் காலமானார். இவருடைய மரணம் குறித்த செய்தியை ஓபராய் குரூப் மிகவும் வருத்தத்துடன் அறிக்கை வாயிலாக வெளியிட்டது. இந்த அறிக்கையில் பிரித்வி ராஜ் சிங் ஓபராய்-யின் மரணம் வருத்தம் அளித்தாலும், இவருடைய பிரமிக்க வைக்கும் வரலாற்றைக் கொண்டாட விரும்புகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கபஷேரா பகுதியில் உள்ள ஓபராய் பண்ணையில் உள்ள பகவந்தி ஓபராய் அறக்கட்டளையில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்குத் தகனம் செய்யும் நிகழ்வு நடக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. PRS ஓபராய்-க்கு தெரிந்த, அவருக்கு இறுதி மரியாதை செலுத்த விரும்பும் அனைவரையும் அழைக்கிறோம் என ஓபராய் குழுமத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. யார் இந்த PRS ஓபராய்..?

'பிகி' என்று பிரபலமாக அறியப்பட்ட PRS ஓபராய், ஓபராய் ஹோட்டல்களின் EIH லிமிடெட்டின் செயல் தலைவர் மற்றும் EIH அசோசியேட்டட் ஹோட்டல் லிமிடெட் தலைவர் பதவிகளை 2022 ஆம் ஆண்டில் துறந்தார். இந்தியாவில் விருந்தோம்பல் துறையின் போக்கை மாற்றியமைத்த தனிநபர் எனப் பெருமை பிஆர்எஸ் ஓபராய்-க்கு உள்ளது.
பிஆர்எஸ் ஓபராய் இந்தியா, இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்தில் கல்லூரிகளில் பட்ட படிப்பை முடித்து நாட்டின் முக்கியமான நகரங்களில் பல சொகுசு ஹோட்டல்களைத் திறந்து சர்வதேச பயணிகளுக்கு விருப்பமான இடமாக ஓபராய் ஹோட்டல்களை மாற்றிய பெருமை பிஆர்எஸ் ஓபராய்க்கு உண்டு.
2008 ஆம் ஆண்டில், நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி, இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் அவருக்கு வழங்கப்பட்டது. பிரித்வி ராஜ் சிங் ஓபராய் போலவே டெல்லியின் முக்கியத் தொழிலதிபரான கேதார்நாத் அகர்வால் நேற்று மறைந்தார்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மிகவும் பிரபலமான பிகனெர்வாலா என்ற இனிப்பு மற்றும் சிற்றுண்டி பிராண்டை, டெல்லியின் தெருக் கடைகிளில் ஒரு காலத்தில் பூஜியா மற்றும் ரஸ்குல்லாவை விற்பனை செய்து படிப்படியாக வளர்ந்து இன்று வருடம் 1 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்து 1300 கோடி வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக மாறியிருக்கும் பிகனெர்வாலா நிறுவனர் கேதார்நாத் அகர்வால் தனது 86 வயதில் திங்களன்று காலமானார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications