அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை மூலம் 100 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்து, செபி, அமலாக்க துறையின் விசாரணை என மோசமான நிலைக்கு சென்ற வேளையில், புதிதாக ஒரு குற்றச்சாட்டை OCCRP என்ற அமைப்பு வெளியிட்டு உள்ளது.
OCCRPA என்ற அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மொரிஷியஸ் நிறுவனங்கள் மறைமுகமாக (Opaque Funds) பல மில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி குழும பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மறைமுக முதலீட்டு நிதி முதலீட்டுக்கும் அதானி குடும்பத்தின் வணிக கூட்டாளிகளின் பங்கீடு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் அதானி குழுமம் குறித்து அறிக்கை வெளியிடும் வரையில் பலருக்கும் இந்த நிறுவனம் குறித்து தெரியாத, இதேபோல தான் இந்த வார துவக்கத்தில் பிரபல இந்திய நிறுவனம் குறித்து முக்கிய குற்றச்சாட்டுகளை வெளியிட உள்ளதாக OCCRPA சொல்லும் வரையில் யாருக்கும் தெரியாது. OCCRPA என்பது Organised Crime and Corruption Reporting Project என்பதன் சுருக்கமே.
OCCRPA அமைப்பு வரி சலுகை நிறைந்த பல நாடுகளில் சேகரிக்கப்பட்ட அறிக்கைகள், அதானி குரூப்-ன் சில் உள்நிறுவன ஈமெயில்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து இந்த குற்றச்சாட்டுகளை வெளியிட்டு உள்ளதாக OCCRPA தெரிவித்துள்ளது.
OCCRPA வெளியிட்டுள்ள அறிக்கையில் குறைந்தது 2 வர்த்தகத்தில் அதானி குடும்ப உறுப்பினர்கள் அல்லது வர்த்தக கூட்டாளிகள் மறைமுக நிதியை (Opaque Funds) பயன்படுத்தி அதானி குழும நிறுவன பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் வாயிலாக வாங்கி விற்பனை செய்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையிலும் கிட்டதட்ட இதேபோன்ற குற்றச்சாட்டுகளை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆப்ஷோர் அக்கவுண்ட்கள் மூலம் பல்வேறு முறைகேடுகள் செய்து செயற்கையாக பங்கு விலையை உயர்த்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைத்தது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையிலும் மொரிஷியஸ் நிறுவனங்கள் குறித்து தெரிவிக்கப்பட்ட நிலையில், செபி தனது விசாரணையில் எத்தகைய ஆதாரங்களை கண்டுபிடித்திருக்கும். அதானி குழுமத்தின் 24 பரிமாற்றத்தில் 22 பரிமாற்றங்களின் விசாரணையை முடித்த நிலையில் இதில் மொரிஷியஸ் நிறுவனங்களின் வாயிலாக மறைமுக நிதி (Opaque Funds) முதலீடுகளும், அதன் பின் செய்யப்பட்ட விற்பனையும் அடங்குமா..?


Click it and Unblock the Notifications