OCCRP குற்றச்சாட்டு.. அதானி குழுமம் ரியாக்ஷன் என்ன? அதானி பங்குகள் பெரும் சரிவு..!!

அதானி குடும்பத்தின் வணிக கூட்டாளிகளான நாசர் அலி ஷபன் அஹ்லி மற்றும் சாங் சுங்-லிங் ஆகியோருக்கு சொந்தமான மொரிஷியஸ் நிறுவனங்கள், வினோத் அதானி-க்கு சொந்தமான நிறுவனங்களின் முதலீட்டு ஆலோசனை பெற்று மறைமுக நிதி (Opaque Funds) வாயிலாக 430 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி குழுமத்தின் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது என OCCRP என்ற அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

நாசர் மற்றும் சாங் சுங் ஆகியோரின் நிறுவனங்கள் வினோத் அதானியின் நிறுவனங்களின் ஆலோசனை படி இயங்கும் கட்டமைப்பு இந்திய விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்ற கேள்வி எழுப்பியது. இந்த பங்குகளும் சேர்த்தால் அதானி குரூப்-ன் உள்நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் 75 சதவீதத்திற்கும் அதிகமான பங்கீட்டை கொண்டு இருக்கும் இந்த அரசு விதிமுறைகளை மீறுவது என OCCRP தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

OCCRP குற்றச்சாட்டு.. அதானி குழுமம் ரியாக்ஷன் என்ன? அதானி பங்குகள் பெரும் சரிவு..!!

இந்த அறிக்கைக்கு OCCRPஅமைப்பு அதானி குழுமத்திடம் பதில் கேட்ட நிலையில் இக்குழு உறுப்பினர், இந்த மொரிஷியஸ் நிறுவன குறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்திய உச்ச நீதிமன்றம் நியமித்த வல்லுனர் குழு, செபி கொடுத்த அறிக்கையின் படி இந்த குற்றச்சாட்டுகளை நிரூபணம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது என தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு எவ்விதமான அடிப்படை தன்மையும் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் திருத்தம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டு உள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையில் மொரிஷியஸ் நிறுவனங்களின் பெயரை வெளியிட்ட நிலையில் இது யாருக்கு சொந்தமானது என்பதை OCCRPஅமைப்பு தற்போது வெளியிட்டு உள்ளது.

மேலும் OCCRPஅமைப்பின் கேள்விக்கு நாசர் மற்றும் சாங் சுங் ஆகியோர் எவ்விதமான பதில் அளிக்கவில்லை, மேலும் கார்டியன் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் சாங் சுங் அதானி குழும பங்குகள் வாங்கப்பட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.

OCCRP அமைப்பு உலகளவில் நடக்கும் ஊழல் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த அமைப்பில் பிரபல நிதியியல் வல்லுனர் ஜார்ஜ் சோரஸ் தலைமையிலான Open Society Foundation (OSF) நிறுவனமும், பிரபல தொழில்துறை குடும்பமான ராக்ஃபெல்லர் குடும்பத்தின் Rockefeller Brothers Fund நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கி வருகிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சில வாரங்களுக்கு முன்பு ஜார்ஜ் சோரஸ் மீதும், அவரின் நிறுவனம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்டது. இதன் மூலம் ஜார்ஜ் சோரஸ் முதலீட்டு மதிப்பில் கணிசமாக பாதிப்பு ஏற்பட்டது இதை தொடர்ந்து தான் ஜார்ஜ் சோரஸ் தனது நிர்வாக பொறுப்பை மகனிடம் கொடுத்தார்.

மேலும் OCCRP அமைப்பு தற்போது வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஏற்கனவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் இருந்த காரணத்தாலும், இது தொடர்பாக செபி ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருக்கும் காரணத்தாலும் மீண்டும் தனி விசாரணை இருக்காது என தெரிகிறது. சுப்ரீம் கோர்ட் இப்புதிய குற்றச்சாட்டுகள் குறித்து என்ன கூறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அதானி குழுமம் OCCRP அமைப்பின் குற்றச்சாட்டுகளை மறுத்தாலும் அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும பங்குகளின் நிலை என்ன..?

  • அதானி எண்டர்பிரைசஸ் - 2.17 சதவீதம் சரிவு
  • அதானி போர்ட்ஸ் - 2.32 சதவீதம் சரிவு
  • அதானி பவர் - 2.42 சதவீதம் சரிவு
  • அதானி எனர்ஜி சொல்யூஷன் - 1.79 சதவீதம் சரிவு (முன்பு இதன் பெயர் அதானி டிரான்ஸ்மிஷன்)
  • அதானி கிரீன் எனர்ஜி - 2.22 சதவீதம் சரிவு
  • அதானி டோட்டல் கேஸ் - 1.83 சதவீதம் சரிவு
  • அதானி வில்மார் - 1.68 சதவீதம் சரிவு
  • ஏசிசி லிமிடெட் - 2.41 சதவீதம் சரிவு
  • அம்புஜா சிமெண்ட்ஸ் - 2.52 சதவீதம் சரிவு
  • NDTV - 1.30 சதவீதம் சரிவு

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+