ஒடிசாவின் மூன்று மாவட்டங்களில் பல இடங்களில் தங்க படிமங்கள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்டீல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரபுல்லா மல்லிக் அம்மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
ஒடிசா மாநிலத்தில் தியோகார், கியோஞ்சார் மற்றும் மயூர்பஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்களில் தங்கம் படிம இருப்பு இருப்பதை இந்திய சுரங்க மற்றும் புவியியல் ஆய்வு இயக்குநரகத்தின் (ஜிஎஸ்ஐ) ஆய்வுகள் உறுதி செய்துள்ளது என்று தேன்கனல் பகுதி எம்எல்ஏ சுதிர் குமார் சமலின் கேள்விக்கு அமைச்சர் பிரபுல்லா மல்லிக் பதிலளித்துள்ளார்.
இந்தியாவை பொருத்த வரையில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்க்கு வெளிநாட்டு இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் வேளையில், ஒடிசா மாநிலத்தில் மட்டும் 3 மாநிலத்தில் பல தங்க படிமம் இருப்பதை கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது ஜாக்பாட் ஆக உள்ளது.
ஒடிசா மாநிலம்
ஒடிசா மாநிலத்தில் மூன்று மாவட்டங்களிலும் தங்க படிமம் இருப்பு உள்ளது என்ற அறிவிப்பு அம்மாநில சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்து கியோஞ்சர், மயூர்பஞ்ச் மற்றும் தியோகர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனால் மக்கள் மத்தியில் எந்த பகுதியில் எல்லாம் இருக்கும் என ஆர்வம் அதிகரித்த வேளையில் இதற்கான பதிலும் கிடைத்துள்ளது.
முக்கிய பகுதிகள்
கியோஞ்சர் மாவட்டத்தின் திமிரிமுண்டா, குஷாகலா, கோட்டிபூர் மற்றும் கோபூர் ஆகிய இடங்களிலும், மயூர்பஞ்ச் மாவட்டத்தின் ஜோஷிபூர், சூரியகுடா, ருவான்சிலா மற்றும் துசுரா மலை பகுதியிலும், தியோகர் மாவட்டத்தின் அடாஸ் பகுதியிலும் தங்க படிம இருப்பு உள்ளது என இந்திய சுரங்க மற்றும் புவியியல் ஆய்வு இயக்குநரகத்தின் ஆய்வுகள் கூறப்படுவதாக ஒடிசா மாநில சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
1980 ஆய்வு
1980களில் கியோஞ்சர் மாவட்டத்தில் தங்க படிமம் இருப்பதாக முதல் ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) அந்த நேரத்தில் இருந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கியோஞ்சர் மாவட்டத்தின் பானசபால் தொகுதியில் உள்ள தாரமகாந்த் மற்றும் நாயக்கோட் பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட குஷாகலா, கோபூர் மற்றும் ஜலதிஹா போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டது.
ரகசியம்
ஆனால் இந்த ஆய்வின் முடிவுகளை அரசு ரகசியமாகவே வைத்திருந்தது. இதன் பின்னர், 2021-2022ல், கியோஞ்சர் மாவட்டத்தில்மிகவும் புதுப்பித்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி GSI மற்றொரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகளையும் GSI அதிகாரிகள் ரகசியம் காத்தனர்.
இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம்
இந்த நிலையில் தான் பிப்ரவரி மாதம் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 51 கனிமத் தொகுதிகளைக் கண்டுபிடித்துள்ளது. இதில் 5 தொகுதிகள் தங்கம் உள்ளதாகவும், மற்ற கனிமத் தொகுதிகளில் பொட்டாஷ், molybdenum , அடிப்படை உலோகங்கள் போன்ற பொருட்கள் உள்ளதாக அறிவித்தது.
51 கனிமத் தொகுதிகள்
இந்த 51 கனிமத் தொகுதிகள் ஜம்மு மற்றும் காஷ்மீர் (UT), ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 11 மாநிலங்களில் உள்ளது எனச் சுரங்க அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
4 வருட ஆய்வு முடிவுகள்
இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் 2018-19 முதல் பிப்ரவரி 9 வரையிலான காலகட்டத்தில் இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு மேற்கொள்ளப்பட்ட பணிகளின் அடிப்படையில் இந்த 51 கனிம தொகுதிகள் பட்டியலிடப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications