பெங்களூரு: பிரபல ஆன்லைன் டாக்சி புக்கிங் சேவை நிறுவனமான ஓலா தற்போது உணவு டெலிவரியிலும் கால் பதித்துள்ளது. ஓலா நிறுவனம் ஓஎன்டிசி வழியாக பெங்களூரின் குறிப்பிட்ட பகுதிகளில் பத்து நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யும் வேலைகளை தொடங்கியுள்ளது.
சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது என ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. ஓலா நிறுவனம் ஓஎன்டிசி எனப்படும் ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் வழியாக பெங்களூருவின் குறிப்பிட்ட பகுதிகளில் உணவு டெலிவரி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. தற்போதைக்கு பெங்களூருவின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இந்த உணவு டெலிவரி சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு சோதனை ஓட்டம் தான் என்றும் இதில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் உணவு டெலிவரி செய்யும் சேவை அறிமுகம் செய்யப்படும் என ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். உணவு டெலிவரி மட்டுமில்லாமல் மளிகை சாமான்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றையும் எளிதாக ஆர்டர் செய்து டெலிவரி பெற்று கொள்ள முடியும் என கூறியுள்ளார்.
வாடிக்கையாளர்கள் தங்களின் ஓலா செயலியை ஓபன் செய்தாலே வாடகை கார் மற்றும் ஆட்டோ சேவைகளோடு, உணவு , மளிகை சாமான்கள் ஆகியவற்றை ஆர்டர் செய்வதற்கான லிங்கும் காட்டுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் தான் ஓலா நிறுவனம் ஓலா டேஷ் என்ற ஒரு புதிய சேவையை அறிமுகம் செய்தது.
பல்வேறு பொருட்களை டெலிவரி செய்ய தான் இந்த சேவை தொடங்கப்பட்டது, தற்போது அதில் உணவு டெலிவரியும் சேர்க்கப்பட்டுள்ளது. 10 நிமிடங்களில் உணவு டெலிவரி என்ற வாக்குறுதியுடன் ஓலா நிறுவனம் இதில் களமிறங்கியுள்ளது. ஓஎன்டிசி தான் எதிர்கால வணிகமாக இருக்கும் என பவிஷ் அகர்வால் கூறுகிறார்.
ஓலா நிறுவனம் இதன் மூலம் தற்போது இந்தியாவில் உணவு டெலிவரி பிரிவில் இருக்கக்கூடிய ஸோமேட்டோ, ஸ்விக்கி மற்றும் குயிக் காமர்ஸ் பிரிவில் இருக்கக்கூடிய ஸெப்டோ, பிளிங்கிட் ஆகியவற்றோடு போட்டியிட தொடங்கியுள்ளது. ஓலா நிறுவனத்தோடு ஊபர் மற்றும் ராபிடோ ஆகிய நிறுவனங்களும் ஓஎன்டிசி தளத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
10 நிமிடங்களில் உணவு டெலிவரி என்ற விளம்பரத்தோடு ஏற்கனவே ஸோமேட்டோ நிறுவனம் தனது பிளிங்கிட் செயலியில் பிஸ்ட்ரோ என்ற சேவையை கொண்டு வந்துள்ளது. அதே போல ஸெப்டோ நிறுவனமும் ஸெப்டோ கஃபே செயின் என்ற சேவையையும் ஸ்விக்கி நிறுவனம் ஸ்விக்கி கோல்ட் அண்ட் கஃபே என்ற சேவையும் அறிமுகம் செய்துள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு அருகே உணவகங்களின் பட்டியல் அதில் காட்டப்படும். அதில் ஆர்டர் செய்தால் 10 நிமிடங்கள் உணவு டெலிவரி செய்யப்படும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications