நீங்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று விரும்பினால் எந்தவொரு சூழ்நிலையிலும் தற்காலிக வசதிகள் மற்றும் வெற்றிகளுடன் சமரசம் செய்து கொண்டு நின்று விடாதீர்கள். விடாமல் உங்கள் லட்சிய கனவை நோக்கி கடுமையாக உழைத்தால் வாழ்க்கையின் புதிய உச்சத்தை நிச்சயமாக தொட்டு விடலாம்.
பிரபல தோசை மற்றும் இட்லி மாவு நிறுவனமான ஐ.டி. ப்ரெஷ் புட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பி.சி. முஸ்தபாவின் வாழ்க்கை அதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது. 6ம் வகுப்பில் பெயிலான ஒரு பையன் ரூ.2,000 கோடி நிறுவனத்துக்கு உரிமையாளராக ஆவார் என்று யாரும் நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள்.

கேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் விவசாய கூலித் தொழிலாளிக்கு மகனாக பிறந்தவர் பி.சி. முஸ்தபா. 6ம் வகுப்பில் பெயில் ஆனதால் படிப்பை பாதியில் விட்டு விட்டு தந்தையுடன் விவசாய வேலைக்கு சென்று வந்தார். அவர்களது ஒரு நாள் வருமானம் ரூ.10 என்ற அளவில் தான் இருந்தது.
இதனால் அவர்கள் குடும்பத்தை நடத்தவே மிகவும் சிரமப்பட்டனர். இந்த சூழ்நிலையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் முஸ்தபா பள்ளி திரும்பவும், படிப்பை முடிக்கவும் உதவினார். கோழிக்கோட்டில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸில் படித்தார். 1995ல் என்ஜினீயரிங் படிப்பை முடித்த அவர் மோட்டோரோலா நிறுவனத்தில் ரூ.15,000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
பின்னர் மன்ஹாட்டன் அசோசியேட்ஸ் நிறுவனத்திலும் சிறிது காலம் பணியாற்றினார். அதன் பிறகு துபாயில் உள்ள சிட்டி பேங்கில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். 2000ல் இன்டீரியர் டிசைனரான சஜ்னா என்பவரை திருமணம் செய்தார். தற்போது அவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
வெளிநாட்டில் அவர் பணிபுரிந்த காலத்தில் அவருக்கு வர்த்தகம் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனையடுத்து ரூ.15 லட்சம் சேமிப்புடன் இந்தியா திரும்பினார். பெங்களூரு ஐ.ஐ.எம்.-ல் வர்த்தக நிர்வாகம் தொடர்பான படிப்பை படித்தார். அங்கு படித்தபோது, இந்தியாவில் வீடுகளில் காலை உணவில் தென்னிந்திய உணவு வகைகள் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தார். இதனையடுத்து இட்லி, தோசை மாவு நிறுவனத்தை தொடங்கினால் நன்றாக சம்பாதிக்கலாம் என்ற யோசனை அவருக்கு எழுந்தது.
இதனையடுத்து தனது நான்கு உறவினர்களுடன் இது குறித்து விவாதித்தார். பின்பு 2005ல் பெங்களூருவில் ரூ.50,000 முதலீட்டில் 50 சதுர அடி கடையில் இட்லி தோசை (ஐ.டி.) ப்ரெஷ் புட்ஸ் என்ற மாவு விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கினார். அருகிலுள்ள மளிகை கடைகளில் தினமும் 100 மாவு பாக்கெட் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்து இருந்தார். ஒரு மாதத்துக்குள் இந்த இலக்கை எட்டி விடலாம் என்று நினைத்தார்.
ஆனால் அது அவருக்கு அவ்வளவு எளிதாக அமையவில்லை, தினமும் 100 பாக்கெட்கள் விற்பனையை எட்ட அவருக்கு 9 மாதங்கள் ஆனது. வர்த்தகம் மெதுவாக நடந்தாலும் நல்ல லாபம் கிடைத்தது. இதனையடுத்து தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்த முஸ்தபா முடிவு செய்தார். இதற்காக கேரளாவில் உள்ள தனது நிலத்தை விற்பனை செய்தார்.
அதில் கிடைத்த பணத்தில் 550 சதுர அடியில் மாவு உற்பத்தி நிறுவனத்தை தொடங்கினார். அதன் பிறகு அவரது வர்த்தகம் வளர தொடங்கியது. தினமும் 100 இட்லி மாவு பாக்கெட்டுகளை விற்பனை செய்தார். மேலும் 300 பங்குதாரர் கடைகளுக்கு தினமும் 200 கிலோ மாவு தயாரித்து வழங்க தொடங்கினார். அவரது மாத வருமானம் ரூ.1 கோடியை எட்டியது. ஹைதராபாத் மற்றும் மும்பை உள்பட 10 புதிய நகரங்களில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தினார். 2014ல் துபாயிலும் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தினார்.
2015ம் ஆண்டுக்குள் ஐ.டி. ப்ரெஷ் புட்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.100 கோடியை எட்டியது. தினமும் 50,000 கிலோ மாவு, 40,000 சப்பாத்தி மற்றும் 2,00,00 பராத்தாக்களை நிறுவனம் விற்பனை செய்தது. இந்த வர்த்தகம் பிரபலமாக இருந்ததால், விப்ரோவின் அசிம் பிரேம்ஜி இந்த நிறுவனத்தில் ரூ.170 கோடி முதலீடு செய்தார்.
சூப்பர்புட்ஸ் வரம்பில் பல்வகைப்படுத்தி, ராகி மாவு, தயிர் மற்றும் பன்னீரையும் விற்பனை செய்ய தொடங்கினார். பெங்களூரின் ஆனேக்கல்லில் 80,000 சதுர அடியில் ஒரு பெரிய தொழிற்சாலையை தொடங்கினார். 2023ல் ஐ.டி. ப்ரெஷ் புட்ஸ் நிறுவனம் வருவாயில் ரூ.500 கோடி என்ற மைல்கல்லை எட்டியது. இன்று இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.2,000 கோடியாக உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications