தங்கம் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் முதல் கீழ்தட்டு மக்கள் வரையில் முக்கிய சேமிப்பு மற்றும் முதலீட்டு கருவியாக உள்ளது. திருமணம், கல்வி செலவுகள், மருத்துவச் செலவுகள், சொந்த வீடு வாங்குவது என அனைத்து முக்கிய நிகழ்விலும் தங்கம் முக்கிய கருவியாக விளங்குகிறது.
இதனாலேயே தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் மக்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப ஒரு கிராம், அரை கிராம் முதல் கிலோ கணக்கில் வாங்குவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். இந்தியா முழுவதும் மக்கள் தங்களது சேமிப்புக்கு ஏற்ப தங்கம் வாங்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் வேளைவில் தங்கம் ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு கடைகளிலும் தங்கம் மாறுபட்ட விலையில் விற்கப்படுகிறது.

இந்த நிலையை மாற்றத் தங்க நகை வர்த்தகத்தில் புரட்சிகரமான மாற்றம் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முயற்சி வெற்றி அடைந்தால் இந்தியா முழுவதும் ஒரே விலையில் தங்கம் விற்கப்பட வாய்ப்பு உள்ளது.
2022 காலகட்டத்தில் கேரளாவில் இருக்கும் முன்னணி நகை கடைகள் அனைத்தும் இணைந்து மாநிலம் முழுவதும் ஒரே விலையில் தங்க நகை விற்க திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இது பெரிய அளவில் நடைமுறைப்படுத்தாமல் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் நாடு முழுவதும் ஒரே விலை (One Nation One Rate - ONOR) என்ற கொள்கையின் கீழ் இந்தியாவின் முன்னணி நகைக்கடை உரிமையாளர்கள் பெரும்பாலானோர் ஒரே விலையில் நாடு முழுவதும் தங்கத்தை விற்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
Gem and Jewellery Council - GJC ஆதரவுடன் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டம், வடக்கு முதல் தெற்கு வரையிலும், கிழக்கு முதல் மேற்கு வரையிலும் இந்தியா முழுவதும் தங்கத்தின் விலையை ஒரே மாதிரியாக நிர்ணயிக்க இலக்கு வைத்துள்ளது.
ஒரே தேசம், ஒரே தங்க விலை என்றால் என்ன?: நாடு முழுவதும் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர்களிடம் ஆலோசனை செய்த GJC, நாடு முழுவதும் ஒரே தங்க விலையை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒருமனதாக ஒப்புதல் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் மாத கூட்டத்தின் போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதகபாதகங்கள்: இந்த புதிய கொள்கையைத் திறம்படச் செயல்படுத்துவதற்கு, அதனைச் சுற்றியுள்ள பிரச்சனைகளை முதலில் களைய வேண்டும். ஒரே தங்க விலை இருப்பதன் மூலம், வாடிக்கையாளர் அனைவருக்கும் சமமான விலையில் நகை விற்கப்படுவதால் சந்தையில் போட்டித்தன்மை குறைந்து வாடிக்கையாளர் சேவையில் அதிகம் கவனம் செலுத்தப்படலாம்
பல்வேறு பகுதிகளுக்கிடையே விலை வேறுபாடுகளை நீக்குவது தங்க சந்தையை மேலும் வலிமையாக்கும். விலை வேறுபாடுகள் இல்லாமல் போவதன் மூலம், தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. நாடு முழுக்க ஒரே விலை இருப்பதன் மூலம், இடைத்தரகர் தலையீடு இருக்காது.
ஏற்கனவே தங்கத்தின் தரத்தில் பல நடைமுறைகள் கொண்டு வரப்பட்டு இருக்கும் வேளையில், இந்த விலை நடைமுறை புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?



Click it and Unblock the Notifications