சென்னை: சென்னையில் தொடர்ந்து ஆறாவது நாளாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. ஜூலை 23ஆம் தேதியான இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து 75,040 ரூபாய் என விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 75,000 ரூபாயை கடந்திருப்பது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை : சென்னையை பொருத்தவரை ஆபரண தங்கத்தின் விலை கடந்த வியாழக்கிழமை முதலே ஏற்றத்திலேயே தான் இருக்கிறது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு தலா 10 ரூபாய் விலை உயர்ந்தது. இதனை அடுத்து வார இறுதி நாளான சனிக்கிழமை அன்று ஒரு கிராமுக்கு 60 ரூபாய் உயர்வு கண்டது. திங்கட்கிழமை அன்று 10 ரூபாயும் செவ்வாய்க்கிழமை அன்று கிராமுக்கு 105 ரூபாயும் என உயர்ந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு 95 ரூபாய் வரை உயர்ந்து இருக்கிறது.

3 நாட்களில் ரூ.1,680 உயர்வு: கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 210 ரூபாய் விலை உயர்வு கண்டுள்ளது. ஒரு சவரன் என பார்க்கும்போது கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 1,680 ரூபாய் என உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் இன்று ஒரு கிராமுக்கு 95 ரூபாய் விலை உயர்ந்து 9,380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 75 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. ஒரு சவரனுக்கு 760 ரூபாய் விலை உயர்ந்து 75,040 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
கிடுகிடுவென உயரும் விலை: 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 104 ரூபாய் விலை உயர்ந்து 10,233 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, ஒரு சவரனுக்கு 832 விலை உயர்வு கண்டு 81,864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 கேரட் தங்கத்தின் விலையும் உயர்வு கண்டுள்ளது. சென்னையில் 18 கேரட் தங்கம் கிராமுக்கு 80 ரூபாய் விலை உயர்ந்து 7,730 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 640 ரூபாய் விலை உயர்ந்து 61,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை என்ன?: தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் வெள்ளியை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 1 ரூபாய் விலை உயர்ந்து 129 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 1000 ரூபாய் விலை உயர்ந்து 1, 29,000 ரூபாயாக இருக்கிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாயும் 1 கிலோவுக்கு 3,000 ரூபாயும் விலை உயர்வு கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications