இந்தியாவின் வர்த்தக உலகில், டாடா குழுமம் என்பது நிறுவனம் மட்டுமின்றி, அது நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையின் அடையாளமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக முடிவுகள் பெரும்பாலும் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டு வந்தன. ஆனால், சமீப காலமாக அதன் நிர்வாகத்தில் எதிர்பாராத உள் முடக்கத்தை சந்தித்து வருகிறது. முடிவெடுக்கும் செயல்பாடுகளில் நிலவும் இந்த திடீர் சலசலப்பு, டாடா குழுமத்தின் எதிர்காலத்தை சற்றே கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்நிலையில், ரத்தன் டாடாவின் முதலாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆனால், டாடா குழுமத்தின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் ரத்தன் டாடா இல்லாததை நினைத்து வருத்தப்படுகின்றனர். ஏனெனில், டாடா அறக்கட்டளையில் நிலவும் துரதிர்ஷ்டவசமான கோஷ்டிப் பூசல்தான். ரூ. 15.24 லட்சம் கோடி மதிப்புள்ள இந்தக் குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் (Tata Sons)-ன் செயல்பாடுகளில் டாடா அறக்கட்டளைக்கு முக்கியமான பங்கு உள்ளது.

டாடா சன்ஸில் 66% பங்குகளை வைத்துள்ள அறக்கட்டளை, அதை பாதுகாப்பதில் எப்போதும் தீவிரமாகச் செயல்படும். இதன் காரணமாக, ரூ. 100 கோடிக்கு அதிகமான எந்தவொரு முக்கிய முதலீட்டு முடிவுக்கும் கூட டாடா அறக்கட்டளையின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
ஆனால், கடந்த ஒரு ஆண்டாக இந்தக் குழுமத்தின் மிகப்பெரிய பங்குதாரர், சர்ச்சைகளில் சிக்கி வருவது பெரும் கவலையை அளிக்கிறது. 2016இல் முன்னாள் தலைவர் சிரஸ் மிஸ்திரியை நீக்குவது தொடர்பான கடுமையான மோதலைத் தொடர்ந்து, தற்போது டாடா அறக்கட்டளையில் மேலும் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது.
தலைவர் நொயல் டாடா மற்றும் வேணு சீனிவாசன் ஆகியோர் ஒருபுறமும், மேஹ்லி மிஸ்திரி, பிரமீத் ஜாவேரி, ஜஹாங்கீர் எச்.சி. ஜஹாங்கீர் மற்றும் டேரியஸ் காம்பட்டா ஆகியோருக்கும் தான் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இது நீதிமன்றம் வரை சென்றது தான் டாடா குழுமத்தின் வரலாற்றிலேயே முன்னெப்போதும் நிகழாத ஒரு நிகழ்வு.
மேஹ்லி மிஸ்திரி, டாடா சன்ஸில் சுமார் 18.37% பங்குகளை வைத்திருக்கும் ஷபூர்ஜி பல்லோன்ஜி (SP) குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், ரத்தன் டாடாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். தனது உறவினரின் சகோதரரான சிரஸ் மிஸ்திரியுடன் ரத்தன் டாடா சண்டையிட்டபோது, ரத்தன் டாடாவுக்கு ஆதரவாக நின்றவர்.
தற்போது, நொயல் டாடா அறக்கட்டளைக்கு தலைவரான பிறகு, முக்கிய முடிவெடுக்கும் குழுவில் இருந்து தான் ஓரங்கட்டப்படுவதாக மேஹ்லி கூறியுள்ளார். 77 வயதான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங்கை, டாடா சன்ஸ் குழுமத்தில் நியமன இயக்குநராக மீண்டும் நியமிக்கும் தீர்மானத்தை மிஸ்திரி தரப்பு நிராகரித்ததுதான் தற்போதைய சர்ச்சைக்கு காரணமாகும்.
ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு, நியமன இயக்குநர்கள் 75 வயதை கடந்தால், அவர்களுக்கு ஆண்டுதோறும் மறுநியமனம் தேவை என்று அறக்கட்டளை ஒரு கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, விஜய் சிங் தாமாக முன்வந்து டாடா சன்ஸ் குழுமத்தில் இருந்து ராஜினாமா செய்தார்.
அதே நேரத்தில், டாடா சன்ஸ் குழுமத்தில் மேஹ்லி மிஸ்திரியை நியமிக்க மிஸ்திரி தரப்பு முயற்சித்தது. ஆனால், அதை நொயல் டாடாவும் வேணு சீனிவாசனும் நிராகரித்தனர். மேலும், மிஸ்திரி தலைமையிலான அணியினர், நொயல் டாடா பரிந்துரைத்த பிரபல வழக்கறிஞர் பெஹ்ராம் வகில், டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குநர் டி.வி. நரேந்திரன், மூத்த வங்கியாளர் உதய் கோடக் ஆகிய 3 பேரையும் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், நொயல் டாடாவின் அதிகாரத்தைக் குறைத்து, டாடா சன்ஸ் நிர்வாகத்தில் அதிக அதிகாரம் பெற 4 அறங்காவலர்கள் முயற்சித்திருப்பது அரசுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் சிறந்த குழுமத்தின் அறங்காவலர்கள் தங்கள் உள் பிரச்சனைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் தலையீட்டைக் கோரியிருப்பது ஒரு வெட்கக்கேடான செயல் என்றும் சிலர் கூறி வருகின்றனர். ரத்தன் டாடா மறைந்து ஓராண்டுக்குள் இந்தக் குழுமத்தின் பாதுகாவலர்களே ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது அனைவரையும் கவலையடைய செய்துள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications