இந்திய மக்களின் அத்தியாவசியமான உணவுப் பொருள்களில் ஒன்றான வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது மக்களுக்கு மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. முக்கியமாகப் பணவீக்கம் குறைந்தால் வட்டி விகிதம் குறையும் வாய்ப்புகள் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு விலை உயர்வால் பாதிக்கப்படும்.
இந்தியாவின் அதிகரித்து வரும் வெங்காய விலை பிரச்சினையைச் சமாளிக்க, சமீபத்தில் மத்திய அரசு சந்தையிலிருந்து 5 லட்சம் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொண்டது. இதற்காக விவசாயிகளுக்குக் கிலோ கிராம் ஒன்றுக்கு ரூ.21/- வழங்கத் திட்டமிடப்பட்டது.

ஆனால், அப்போது சந்தை விலை கிலோவுக்கு ரூ.30-32/- ஆக இருந்த காரணத்தால் அரசு வழங்கும் விலை மிகக் குறைவு என்பதால் அரசுக்கு விற்பனை செய்ய விவசாயிகள் முன்வரவில்லை. இதன் காரணமாக, இதுவரை மத்திய அரசு தனது இலக்கில் 10% கூட கொள்முதல் செய்ய முடியவில்லை.
இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், மத்திய வெங்காய ஏற்றுமதிக்குத் தடை நீக்கப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு மத்திய அரசு இந்த கொள்முதல் முயற்சி மேற்கொண்டது தான்.
ஏற்றுமதி தடை நீக்கப்பட்டதால், இந்தியாவில் விளைந்த வெங்காயம் அதிக விலைக்கும், அதிக லாபத்திற்கும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் வாயிலாக உள்நாட்டு விநியோகம் குறைந்து, விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு டன் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை (MEP) $550 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாயில் கிலோ கிராம் ஒன்றுக்கு ரூ.45/-க்கு சமமாக இருக்கும்.
இதனால், ஏற்றுமதிக்கான ஊக்கம் அதிகரித்து, உள்நாட்டு விற்பனை சந்தைக்குக் குறைவான அளவே கிடைக்கிறது. இதேவேளையில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற முக்கிய வெங்காய உற்பத்தி மாநிலங்களில், இதன் உற்பத்தி குறைந்துள்ளதால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெங்காயம் விலை 15% உயர்வு ஏற்பட்டுள்ளது.
வெங்காய விலை உயர்வு என்பது, நாட்டின் உணவு பணவீக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மே மாதத்தில், நகர்ப்புற பகுதிகளில் உணவுப்பொருள் பணவீக்கம் 8.8% ஆகவும், கிராமப்புற பகுதிகளில் 8.6% ஆகவும் இருந்தது.
தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு (TOP - Tomato, Onion, Potato) போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பெரிய அளவில் உயர்ந்துள்ளன. குறிப்பாக, தக்காளி விலை 35% அதிகரித்துள்ளது, வெங்காய விலை 58% அதிகரித்துள்ளது, மற்றும் உருளைக்கிழங்கு விலை 44% அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் குடும்ப பட்ஜெட்டில் பெரிய ஓட்டை போட்டு உள்ளது. ஜூன் மாதத்தில் இதன் விலை நிலவரம் இன்னும் மோசமாகியுள்ளது.
இந்த நிலையில், வெங்காயம் விலையை உடனடியாக குறைக்க மத்திய அரசு தனது இருப்பில் இருக்கும் வெங்காயக் கையிருப்பைச் சந்தைக்குக் கொண்டு வர வேண்டும், இதன் மூலம் விலையைக் கட்டுப்படுத்த உதவ வேண்டும்.
இதேவேளையில் மத்திய அரசு முன்பு 21 ரூபாய் விலையில் வாங்கிய வெங்காயத்தை தற்போது அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்து பெரும் லாபத்தை பார்க்க முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications