இந்தியாவில் வெங்காய விலை கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன, இதில் முக்கிய காரணம் வெங்காய உற்பத்தியில் முன்னோடியாகத் திகழும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் வெங்காயங்களின் தரம் மோசமாக இருக்கிறது.
இதனால் சந்தையில் பழைய, அதிக விலைமதிப்புள்ள வெங்காயத்திற்கு அதிகப்படியான தேவை உருவாகியுள்ளது. அதே நேரத்தில், குறிப்பாக பங்காளதேஷ் நாட்டிற்கான ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது, இதனால் சப்ளை டிமாண்ட் பிரச்சனை உருவாகி வெங்காயம் விலை தற்போது பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் விளையும் வெங்காயத்தின் தரம் பாதிக்கப்பட முக்கியமான காரணம் இப்பகுதிகளில் பெய்த அதிகப்படியான மழை தான். இதன் தாக்கம் மொத்த விற்பனை சந்தைகளில் தெளிவாகத் தெரிகிறது.
வெங்காயம் இந்திய உணவுகளில் மிகவும் முக்கியமானது என்பதாலும், சைவம், அசைவ உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் பொருளாக இருப்பதால் மக்களின் பட்ஜெட் பாதித்து, நாட்டின் உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது.
வட இந்தியாவில் முக்கியமான மொத்த விற்பனை சந்தையான நாசிக் பீம்பல்கான் சந்தையில் உயர் தரம் கொண்ட வெங்காயத்தின் அதிகபட்ச விலை இரண்டு வாரங்களில் ரூ.51/கிலோவிலிருந்து ரூ.70/கிலோவாக உயர்ந்துள்ளது. அதேபோல், அதே காலகட்டத்தில் சராசரி விலை ரூ.51/கிலோவிலிருந்து ரூ.58/கிலோவாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம், நாசிக்-லாலோங்கான் சந்தையில் வெங்காய விலை ஐந்து ஆண்டு உயர்வான ரூ.54 ரூபாயை தொட்டது. தீபாவளி விழாவின் போது நாடு முழுவதும் மொத்த சந்தைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட விநியோகக் குறைபாட்டாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் மொத்த விற்பனை விலையை ஒப்பிட்டுப் பார்த்தால் கடந்த 3 வாரத்தில் வெங்காயம் விலை 30-35% வரை உயர்வு ஏற்பட்டது.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விலை நிலவரமும் மொத்த விற்பனை சந்தை விலை, ரீடைல் சந்தையில் இதன் விலை சற்று அதிகமாகவே உள்ளது. உதாரணமாகப் பெங்களூரில் இன்று ரீடைல் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.
இதேபோல் சென்னையில் ஒரு கிலோ 90 முதல் 110 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. இந்த சென்னை, பெங்களூர் வெங்காயம் விலை நிலவரம் உயர்தர வெங்காயத்தின் விலை நிலவரமாகும். ஈரம் கொண்ட, தரம் குறைவான வெங்காயம் 50 முதல் 70 ரூபாய் வரையில் நாட்டின் அனைத்து நகரங்களிலும் விற்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் புதிய பயிரின் வருகையும் தாமதமாகியுள்ளது, இதனால் சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதேவேளையில் நாட்டின் சில பகுதிகளில் புதிய பயிரின் அறுவடை முடிந்து சந்தைக்கு வருவதால் அடுத்த 8-10 நாட்களில் வெங்காயம் விலை குறையலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications