ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டத்தின் முடிவில் பல மாதங்களாக கிடப்பில் இருந்த ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், சூதாட்ட விடுதிகளின் விற்றுமுதல் அதாவது Turnover மீது சுமார் 28% ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இப்புதிய வரி விதிப்பு மூலம் என்ன நடக்கும்..?
இந்த அறிவிப்பு ஆன்லைன் கேமிங் துறையில் இருப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்தது மட்டும் அல்லாமல் பல நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் பல ஆயிரம் பேர் தங்களுடைய வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதாரணமாக ஆன்லைன் கேமிங் துறையில் ஒருவர் 100 ரூபாய் செலுத்துகிறார் எனில் இதில் 28 சதவீத ஜிஎஸ்டி போக 72 ரூபாய்க்கு மட்டும் தான் பெட்டிங் செய்ய முடியும். 72 ரூபாயும் வெற்றி பெற்று திரும்ப எடுக்கிறார் எனில் அவருக்கு platform fees போக 54 ரூபாய் கிடைக்கும். இதில் 30 சதவீதம் டிசிஎஸ் பிடித்தம் உள்ளது.
இதை வைத்து நடு வீட்டில் swimming pool-ஆ கட்ட போகிறார், இந்தியாவின் ரியல் மனி கேமிங் இன்டஸ்ட்ரீ இறந்துவிட்டது என அஷ்னீர் குரோவர் டிவீட் செய்துள்ளார். அவருடைய டிவீட்டில் இவ்வளவு நாள் fantasy gaming துறையில் இருந்தது மகிழ்ச்சி, தற்போது இத்துறை கொலை செய்யப்பட்டு உள்ளது. இந்த பருவமழையில் 10 பில்லியன் டாலர் துறை மாயமாகும் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை வேகமாக வளர்ச்சி அடைந்தும், ஒவ்வொரு காலாண்டிலும் அதிகப்படியான விற்றுமுதலை பெற்று வருகிறது. ஆனால் இதேகாலக்கட்டத்தில் பலர் இத்தகைய தளத்தில் அதிகளவிலான பணத்தை இழந்து தற்கொலை செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
ஆன்லைன் கேமிங் துறையில் விதிக்கப்பட்டு உள்ள 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் சட்டப்பூர்வமாக இயக்கும் ஆன்லைன் கேமிங் துறை இயங்குவது கடினமாகும். இந்த வரி மூலம் வெளிநாட்டு கேமிங் தளம், முறைகேடாக இயக்கும் தளத்தில் மக்கள் முதலீடு செய்வார்கள். இதனால் அரசுக்கு வரி இழப்பு, முதலீடுகள் வெளியேற்றம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் Games24x7 நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ தெரிவித்தார்.
ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், சூதாட்ட விடுதிகளின் விற்றுமுதல் அதாவது Turnover மீது சுமார் 28% ஜிஎஸ்டி வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டத்தின் முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இத்துறையில் முதலீடு செய்யும் அளவும், முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் குறையும் வேகமாக குறையும். இதனால் இத்துறையில் இருக்கும் ஊழியர்கள் அடுத்த சில நாட்களில் அதிகளவில் தங்களுடைய பணியை இழக்க நேரிடும்.
இந்திய ஆன்லைன் கேமிங் துறை கடந்த 5 வருடத்தில் மட்டும் இந்திய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் சுமார் 2.8 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications