தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் இடங்களில் ஒன்றாகும். பசுமையான காட்சிகள், தேயிலைத் தோட்டங்கள், குளிர்ந்த காலநிலை என வெயில் சுட்டெரிக்கும் போது இதமான சுற்றுலாத் தளமாக நீலகிரி திகழ்கிறது. ஊட்டிக்கு செல்லும் அனைவரும் அங்கு கிடைக்கும் ஒரு தின்பண்டமான ஊட்டி வர்க்கியை சுவைத்துப் பார்க்காமல் திரும்பி இருக்க மாட்டார்கள். ஆனால், இந்த உணவுப் பொருளுக்கு புவிசார் குறியீடு (GI tag) கிடைத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?
புவிசார் குறியீடு என்றால் என்ன?: ஜியோகிராபிக் இண்டிகேஷன் (GI) எனப்படும் புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது நாட்டிலோ தயாரிக்கப்படும் பொருட்களுக்கு வழங்கப்படும் ஒரு சிறப்பு குறியீடாகும். GI குறியீடு என்பது, ஒரு பொருள் பாரம்பரிய முறையாக தயாரிக்கப்பட்டு, தரம் காக்கப்பட்டது என்பதற்கு சான்றாக வழங்கப்படும் குறியீடாகும்.

ஊட்டி வர்க்கி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மிகவும் சுவையான சைவ தின்பண்டங்களில் ஒன்றாகும். இது கோதுமை மாவு அல்லது மைதா, அரிசி ரவா, தண்ணீர், நெய், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் மிருதுவான பிஸ்கட் போன்றது.
நீலகிரியில் பல்வேறு பகுதிகளில் வர்க்கி தயாரிக்கப்பட்டாலும், ஊட்டி வர்கிக்கென்று தனி டேஸ்ட் இருக்கும். ஊட்டியில் உள்ள தட்பவெப்ப நிலை மற்றும் தண்ணீர் ஆகியவை இதற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
வாழைப்பழம், ரவா மற்றும் சர்க்கரையால் செய்யப்பட்ட மாவைக் கொண்டு தயாரிக்கப்படும் வார்க்கிகளும் இங்கு உள்ளது. அறிக்கைகளின்படி, இப்பகுதியில் குறைந்தது 90 பேக்கர்கள் சுவையான வர்க்கியைத் தயாரிக்கின்றனர்.
2015-ஆம் ஆண்டில், ஊட்டி பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் புவிசார் குறியீட்டைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அதை அவர்கள் 2022-2023 ஆம் ஆண்டில் வெற்றிகரமாகப் பெற்றனர். இதன் பொருள் ஊட்டி வர்க்கி என்ற பெயரில் நாட்டின் பிற பகுதிகளிலும் உலகெங்கிலும் இப்போது வர்க்கி விற்கப்படலாம்.
ஊட்டி வர்க்கி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?: முதலில், கோதுமை மாவு அல்லது மைதாவுடன் அரிசி ரவா, தண்ணீர், நெய், சர்க்கரை மற்றும் உப்பு கலந்து மாவை உருவாக்குகின்றனர். பின்னர் மாவை சிறிய பகுதிகளாகப் பிரித்து, ஒரு விறகு அடுப்பைப் பயன்படுத்தி ஒரு தட்டில் வைக்கின்றனர். குறைந்த பட்சம் 50 நிமிடங்கள் பேக்கிங் செய்த பிறகு, ஊட்டி வார்கி பேக்கிங் செய்து விற்பனைக்கு தயாராகிறது.
வர்க்கி விற்பனையாளர்கள் கூறுகையில், தினமும் 100 முதல் 150 கிலோ வரை ஊட்டி வர்க்கி தயாரிக்கப்படுகிறது. ஒரு முதலீடாக சுமார் 8,000 ரூபாய் இதற்கு செலவாகும். மேலும் இந்த உணவை உற்பத்தி செய்வதன் மூலம் ஒருவர் மாதம் 40,000 முதல் 50,000 வரை எளிதாக சம்பாதிக்க முடியும்.
இதுகுறித்து உள்ளூர் பேக்கரி உரிமையாளர் வசீம் கூறுகையில், “ஊட்டியின் அனைத்து பகுதிகளிலும் எங்கள் வர்க்கி விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி அன்னூர், அவிநாசி, மேட்டுப்பாளையம், சென்னை, மதுரை, ஐதராபாத் என பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். ஊட்டியில் தான் வர்க்கி உருவாகிறது, ஊட்டியில் தயாரிக்கப்படுவதுதான் உண்மையான வர்க்கி என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications