அமெரிக்காவில் கூகுள், மெட்டா போன்ற பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது திறமையான பணியாளர்களை தக்கவைக்க என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்து வருகின்றன. இதுக்கு எல்லாம் சாட்ஜி.டி.பி. தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஓபன் ஏ.ஐ. நிறுவனம் தான் காரணம். இந்நிறுவனத்துக்கு திறமையான பணியாளர்கள் உடனடியாக தேவைப்படுகிறது. அதனால் போட்டி நிறுவனங்களில் பணியாற்றும் திறமையான பணியாளர்களுக்கு வலை வீசியுள்ளது.
ஓபன் ஏ.ஐ. நிறுவனம் தற்போது தனது போட்டி நிறுவனங்களான மெட்டா மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களில் இருந்து திறமையான பணியாளர்களை தன் பக்கம் இழுக்கும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.83 கோடி சம்பளம் வழங்கப்படும் அறிவித்துள்ளது.

சாம் ஆல்ட்மேன் தலைமையிலான ஓபன் ஏ.ஐ. நிறுவனம் ஏற்கனவே கூகுள் மற்றும் மெட்டாவில் பணிபுரிந்த குறைந்தபட்சம் 93 பேரை வேலைக்கு எடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி நிலவரப்படி, இந்நிறுவனத்தில் முன்னாள் கூகுள் பணியாளர்கள் 59 பேரும், முன்னாள் மெட்டா பணியாளர்கள் 34 பேரும் பணிபுரிந்து வருகின்றனர்.
ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தில் ரிசர்ச் என்ஜினீயர்கள் வேலைக்கு ஆண்டு சம்பளம் சுமார் ரூ.2 கோடி முதல் ரூ.3.8 கோடி வரை உள்ளது. இதனுடன் தாராளமான பங்கு மற்றும் பிற பலன்களுடன் சேர்த்தால் ஆண்டு சம்பளம் ரூ.83 கோடியாக இருக்கும்.
அண்மையில் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சூப்பர் அலைன்மென்ட் பிரிவு தலைவர் ஜான் லீக் பேட்டி ஒன்றில் பேசுகையில், எங்களது ஏ.ஐ. சிஸ்டத்தை மனித நலன்களுடன் சீரமைப்பதில் எங்கள் குழு கவனம் செலுத்துகிறது. ரிசர்ச் என்ஜினீயர்ஸ், விஞ்ஞானிகள், மேலாளர்களை பணியமர்த்துவதாக தெரிவித்து இருந்தார்.
இந்த ஆண்டில் தொடக்கத்தில் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மேன் இந்தியா வந்திருந்தபோது, எங்கள் சிறந்த ஆராயச்சியாளர்களில் பலர் இளங்கலை பட்டதாரிகள் அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள்.
பெரிய வேலையை செய்ய உங்களுக்கு நிச்சயமாக பி.எச்.டி. தேவையில்லை. திறமையின் அடிப்படையில் ஓபன்ஏ.ஐ. உங்களை வரவேற்கும். இளங்கலை படித்த மாணவர்களுக்கு எங்கள் நிறுவனம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications