மக்கள் கூடும் இடங்கள் எல்லாமே தொழில் தொடங்குவதற்கான சிறந்த இடங்கள். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் ரயில் நிலையங்களும் வர்த்தகம் தொடங்குவதற்கான நல்ல இடமாகும். உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றான இந்தியன் ரயில்வே மக்களுக்கு ஏராளமான வணிக வாய்ப்புகளை வழங்குகிறது.
ரயில் நிலைய நடைமேடையில் டீ, காபி, உணவு, பாட்டில், தண்ணீர், புத்தகங்கள், பொம்மைகள், செய்தித்தாள்கள் மற்றும் பிற பொருட்களை விற்கும் ஒரு கடையை திறந்தால் நிலையான வருவாயை ஏற்படுத்தி கொள்ளலாம்.

நாளுக்கு நாள் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, பிளாட்ஃபார்ம்களில் காணப்படும் நெரிசல் அதனை உறுதி செய்கிறது. ஆக, உங்கள் வணிகம் ஒருபோதும் வாடிக்கையாளர்களை இழக்காது என்பது உத்தரவாதம்.
எனவே ரயில்வே ஸ்டேஷனில் கடை திறப்பது வெற்றியாகத்தான் அமையும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் கடையை கவனமாக தேர்ந்தெடுத்து, அதை ஒரு பிரதான பகுதியில் அமைக்க வேண்டும். இதை மட்டும் சரியாக செய்து விட்டால் நல்ல வருமானம் ஈட்டலாம்.
ரயில் நிலையத்தில் கடை திறப்பது எப்படி?
ரயில் நிலைய ப்ளாட்பார்ம்களில் கடை திறப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் இல்லை. நடைமேடைகளில் கடை திறப்பதற்கான டெண்டர்களை இந்திய ரயில்வே வழக்கமாக நடத்துகிறது.
1. முதலில் IRCTC வெப்சைட்டில் நடைமேடைகளில் கடை திறப்பதற்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.
2. டெண்டர்கள் விடப்பட்டு இருந்தால், ரயில்வே மண்டல அலுவலகத்துக்கு சென்று நேரில் விண்ணப்பிக்கலாம்.
3. ரயில்வே டெண்டர்களுக்கு விண்ணப்பிக்க, உங்களுடைய வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு போன்ற தேவையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
4. இதைத் தொடர்ந்து ரயில்வே உங்கள் விண்ணப்பத்தை சரிபார்க்கும். நீங்கள் தகுதி தேவைகளை கொண்டு இருக்கிறீர்கள் என்பதை ரயில்வே உறுதிப்படுத்தியவுடன் உங்களுக்கு டெண்டர் வழங்கப்படும்.
டெண்டரை பெற்ற பிறகு , ரயில்வே பிளாட்பாரத்தில் நீங்கள் கடையை திறந்து வர்த்தகம் செய்யலாம். ரயில் நிலையத்தில் உங்கள் கடையை 5 ஆண்டுகள் நடத்தலாம். கடையை பொறுத்து கட்டணம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும்.
More From GoodReturns

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!



Click it and Unblock the Notifications