மீண்டும் ஏற்றத்தில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 48,400க்கு மேல் வர்த்தகம்.. ஜாக்பாட் தான்..!

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இந்திய சந்தைகள் புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றன. இந்த நிலையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்றும் சந்தை ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

இன்று ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே இந்திய குறியீடுகள் ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 319.46 புள்ளிகள் அதிகரித்து, 48,412.78 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 172.90 புள்ளிகள் அதிகரித்து, 14,310.30 புள்ளிகள் ஆகவும் காணப்பட்டது.

இதற்கிடையில் சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 333.85 புள்ளிகள் அதிகரித்து, 48,427.17 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 97 புள்ளிகள் அதிகரித்து, 14,234.40 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது. இதில் 1204 பங்குகள் ஏற்றத்திலும், இதே 201 பங்குகள் சரிவிலும், இதே 41 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

இதற்கிடையில் நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள யுபிஎல், ஈச்சர் மோட்டார்ஸ், லார்சன், பிபிசிஎல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹிண்டால்கோ, டைட்டன் நிறுவனம், ஹெச்டிஎஃப்சி, நெஸ்டில், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள லார்சன், பவர் கிரிட் கார்ப், டெக் மகேந்திரா, சன் பார்மா, அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டைட்டன் நிறுவனம், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

என்ன காரணம்?

என்ன காரணம்?

அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.39 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது கடந்த வியாழக்கிழமையன்று 73.32 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
அமெரிக்கா பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் முடிவடைந்துள்ள நிலையில், ஆசிய சந்தைகள் சிலவும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகிறது. இது அமெரிக்காவின் ஊக்கத் தொகை அறிவிப்புகள் பொருளாதாரத்திற்கு கைகொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்தும் அதிகமாகவே உள்ளது.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

இந்திய சந்தைகள் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தில் காணப்படும் நிலையில், இன்றும் தற்போது சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இது தற்போது சென்செக்ஸ் 367 புள்ளிகள் அதிகரித்து, 48,460.45 ஆகவும், இதே நிஃப்டி 118.90 புள்ளிகள் அதிகரித்து, 14,256.25 ஆகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+